Friday, December 14, 2012

காமம்


காற்றின் கரம்பிடித்து
அலையும் காமம்
தொட்டுச்செல்லும்
ஒவ்வொருவருக்குள்ளும்
இட்டுச்செல்கிறது
தீயை...

பற்றிய தீ த‌ன்
தகிப்பைத் தணிக்க
கட்டியணைக்கிறது
இன்னொரு தணலை...

மூட்டிவிட்ட காற்றின்வேலை
முடிந்தபின்னும்
கணன்றுகொண்டிருக்கிறது
காடு.

Wednesday, November 28, 2012

ஏதேன்


விலக்கப்பட்டதாய்
அறிவிக்கப்பட்ட அடுத்தநொடி
உதடுசுழித்து சிரித்தாள் ஏவாள்
ஆதாமை நோக்கி!
அனுமதியின்றி எழுந்துபோனான்
அவனும் முதுகுகாட்டி!

தெரிவித்திருக்கக்கூடும்
சாத்தான்
என் தந்திரத்தை
முன்கூட்டியே!

பிறிதொருநாளில்
வெறியோடு உலுக்கிக்கொண்டிருந்தான்
ஆதாம்
விஷ விருக்ஷ்த்தின் வேர்களை.

ஆவலோடு
ருசித்துக்கொண்டிருந்தாள்
ஏவாள்
உதிரத்தொடங்கிய கனிகளை.

ந(க)ர(க)மாக மாற‌த்தொடங்கியது
ஏதேன்.

நகர்ந்துவிட்டேன் அங்கிருந்து.


Monday, November 26, 2012

என்னை நானாய்
குணங்கள் அற்று
இருப்பதனால்
கோமாளியெனும் பட்டம்.

தேவைக்கு அதிகமாய்
தேவையில்லை என்ற‌தற்காய்
தேடிப்பிடித்துத்தந்தார்கள்
கையாலாகாதவன்
எனும் கௌரவம்.

சுவைகள் அற்றவனாய்
திரிந்தவனுக்கு
சூட்டிமகிழ்ந்தார்கள்
ஜடம் எனும் அடைமொழி.

சின்னங்கள் இல்லாமல்
அலைவதனால்
நாத்திகனாம்.

அமைதிவேண்டி
மௌனம்காத்தால்
அசமந்தமாம்.

காயங்கள் தவிர்க்க‌
ரகசியம் காத்தால்
அழுத்தக்காரனாம்.

சத்தியம் நீ
அடித்துச்சொல்லும்
கற்பூரத்தில் இல்லை -
எங்கும் நிரைந்திருக்கும்
நித்தியத்தில் இருக்கிறதென்றால்
பொய்யனாம்.

வண்மம் தவிர்க்க‌
விலகிச்சென்றால்
பேடியாம்.

இப்படியாயும்
இன்னும் பலவாய்யும்
அறியப்படும் என்னை
நானாய் அறியநேர்வது
என்றோ?
Saturday, November 24, 2012

காலம்


வெற்றியை
விரட்டிப்பிடிக்கும் முயற்சியில்
வீணாகிக்கொண்டிருக்கிறது
வியர்வைத்துளிகள்.

பொதுவான கணிப்பிற்குள்
சிக்காமல்
போக்குக்காட்டிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

வெட்டி வீழ்த்தி
வீரநடை போடநினைக்கையில்
பாதையில் பரவிக்கிடக்கும்
நெருஞ்சியை காட்டி
சிரிக்கிறது விவேகம்.

நிதானம் தவறக்கூடாதெனும்
பிரயத்தனத்தில்
நிலைதடுமாறிக்கொண்டிருக்கிறது
நிகழ்காலம்.

சுயமாய்
நிமிரநினைக்கையில்
ஊன்றுகோல் ஏந்தவைக்கிறது
காலம்.

Thursday, October 25, 2012

சன்னதி வாசலில்எல்லாமாகவும் இருக்கிறாய்,
எல்லாமும் தருகிறாய்
எனில் எதுவேண்ட உன்னிடம்.

கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க
கேட்காதவைகளால் நிரைந்துகிடக்கிறது
வாழ்க்கை!

நிரம்பி வழியும் அனுபவச்சேர்க்கையால்
காயம்பட்டு துடிக்கிறது
பிறர் எல்லைக்குள்
நுழையத்துடிக்கும் நாவு,

மூக்கறுபட்ட கையறுநிலையில்தான்
வந்து நிற்கிறேன்
ஒவ்வொருமுறையும்,

வேண்டுதற்கொண்றுமில்லை
என் வினை எனை சுட்டதால்
வெறுமையாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உன்னையும்
உலகையும்.

Thursday, October 11, 2012

மூன்றாம் உலகநாடுகளின் சந்தைகண்ணைவிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றாம் உலகநாடுகளின் சந்தையும்.

உலகப்பெருமுதலாளிகளின் லாபவெறிக்கு தன் கண்னைமட்டுமல்ல உயிரையே கொடுத்துக்கொண்டிருப்பதுதான் மூன்றாம் உலக நாடுகள்.
வென்றவன் எழுதுவதே சரித்திரம் என்பதால் முதலாளிகளோடு ஒரு உரையாடல்.


"வனக்கம் முதலாளி!"

ஆங்.. ஆங்.. வணக்கம். என்ன இந்தப்பக்கம்?"

"ஒன்னுமில்லை சும்மா உங்களை பாத்துட்டுபோலாம்னுதான்...."

"என்ன விஷயமா?"

ஒன்னுமில்லை ஒலகமே உங்கள பாத்துகிட்டிருக்கு அதுல சிலரு தன் மூக்குமேல விரலைவைக்கிறான், சிலபேரு உங்க ....த்துலயே வெரலவிடுறான் இதை நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?"


"முதளாலித்துவத்தின் உயிர்நாடியே சந்தைதான். அதன் தொடர் இய‌க்கம் மட்டுமே எங்களின் ஒரே குறிக்கோள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செயத்தாயார்."

"  அப்படியா என்ன செய்வீர்கள்?
"
போபாலில் பல ஆயிரம்பேரை கொள்வோம்."

"ஏன் அப்படி?"
"

"மூன்றாம் உலக நாடான உங்கள் தேசத்தில் குறைந்த மாசுக்கேடே ஏற்ப்பட்டுள்ளது . இதனால் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளிப்படும் மாசை உங்கள் தேசத்திற்கு நகர்த்துவது என்று முடிவு செய்தோம். அதன் பலன் நீங்கள் அறிந்ததுதானே?"

"ஆமாம்! ஆமாம்! அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நிவாரணத்தொகைக்கூட கிடைக்கவில்லை. சரி வேறு?"


" தூத்துக்குடியில் உள்ள STERLITE ஆலையில் காப்பரில் இருந்து அதனுடன் கலக்கும் பிர தாதுக்களை பிரிக்கும் பணியால் கல்லீரல் புற்று நோயை உண்டாகும் என‌த்தெரிந்ததனால் அந்தப்பணியை மூன்றாம் உலக நாடான உங்களுக்கு ஒதுக்கிவிட்டோம்."

"அவ்வளவுதானா?"

"என்ன இப்படி கேட்டுக்கீங்க உலகின் வளர்ந்த நாடுகள் அனு உலைகள் வேண்டாம்னு முடிவெடுத்த உடனே எங்கமூட்டை முடிச்சுக்களை தூக்கிகிட்டு உங்ககிட்டதானே வந்தோம்."

"ஆனா இங்கவுள்ள‌ அனு உலைகள் ரொம்ப பாதுகாப்பானதுன்னு எங்க அரசியல்வாதிகளும் அறிவாளிகளும் சொல்ராங்களே"

" ஆமா அப்படித்தான் நாங்க சொல்லச்சொல்லியிருக்கோம்"

"நல்லதா எதையுமே சொன்னதில்லையா?"

"ஏன் இல்லை?  90 களில் உலக அழகி பட்டமெல்லாம் கொடுத்தோமே மறந்துட்டீங்களா?

" உலக அழகி பட்டத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"

"சரியாப்போச்சு... உங்களுக்கு உலக அழகி பட்டம் கொடுத்ததாலதான் இன்னிக்கி எங்க அழகுசாதன பொருட்களுக்க்கான சந்தையில் நீங்கள் முக்கிய பங்கு எடுத்துகிட்டிருக்கீங்க. இன்னிக்கு சந்துக்கு சந்து இவ்வளவு பியூட்டி பார்லர் இருக்கே அதுக்கு யார் காரணம்? நாங்கதான்."

"இதெல்லாம் எங்க மக்களுக்கு தெரியுமா?"


" தெரியாது. தெரிஞ்சாமட்டும் என்ன பண்ணிடுவீங்க?
அதற்குள் செல்போன் மணி அடிக்க‌

" அலோ ஆங்.. ஆங்... கேக்குது சிரியால...  புணர்நிர்மாண பணிகளுக்காக....  உலக வங்கி..... கடன் உதவி அளிக்குதா?  இதோ வந்துட்டேன்." போனை வைத்துவிட்டு "ஏய் மேன் உங்கூடபேச நேரமில்லை இதைப்பத்தி நாம இன்னொருநாள் விலாவரியா பேசலாம். இப்ப நீ கிளம்பு"

" சரிங்க முதலாளி நான் வாரேன்"


Thursday, August 16, 2012

டீக்கடை விவாதம்"இவங்களயெல்லாம் செறுப்பால அடிக்கனுங்கறேன் '

"ஏய் அப்படியெல்லாம் வாய்க்குவந்தாப்பல ஒளரக்கூடாது சொல்லிபுட்டேன். எங்காளு ஒரு முடிவெடுக்கருண்ணா அதுல ஆயிரம் சமாச்சாரம் இருக்கும் அதையெல்லாம் உங்கிட்ட சொல்லிகிட்டிருக்கதேவையில்லை தெரிதா?"

"என்னத்த பெரிய புளியங்கா சமாச்சாரம் கொத்துகொத்தா மக்க செத்திகிட்டிருந்தப்போ வாயையும் ........த்தையும் பொத்திகிட்டுகெடந்துட்டு இப்போ கூட்டம் நடத்றேன்னா கேக்கறவன கேனப்.........டைனு நெனைக்கிரார உங்காளு

"எங்காளாச்சும் ஆரம்பத்துலேந்தே குரல் கொடுத்துட்டேத்தான் இருக்காப்பல, உங்காளுக்குத்தான் இப்ப திடீர்னு அவங்கமேல பாசம் பொத்துகிட்டுவருது. வீனா வாயகொடுத்து .....த்த புண்ணாக்கிக்காத ஆமா."

இப்படி நேருக்குநேர் சரமாரியாய் அரசியல் பேசி(ஏசி)க்கொண்டிருந்தகாலம் ஒன்று இருந்ததது அதற்கான மேடைகளாய் அமைந்தவை டீக்கடைகளும், பார்பர்ஷாப்புக்களுமே. இங்கே அரசியல் பேசக்கூடாதுனு போர்டுகூட எழுதிவெச்சிருப்பாங்க ஆனாலும் அங்க அரசியல் உழளும் தவிர்க்கவேமுடியாது. அன்னிக்கி செய்தித்தாள்களும் வானொலியும் மட்டுமே செய்திகளை பரப்பிகிட்டிருந்ததால ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் இடையில நிறையகால அவகாசம் இருந்தது அந்த அவகாசம் நிறைய அனுமானங்களை கொடுத்தது அதனால் தொண்டர்கள் அதைப்பற்றி பேச விவாதிக்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால் தொண்டர்களின் அனுமானங்கள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கும். காரணம் அன்று கட்சியென்பது ஒரு கூட்டுக்குடும்பம். அதில் ஒரு தார்மீகம் இருந்தது. அந்த தார்மீக்த்தின் அடிப்படையில் முடிவுகளும், முழக்கங்களும் அமைந்தன. ஆகையினாலேயே அடிமட்ட தொண்டனும் தலைவனும் நெருக்கமானவர்களாய் இருந்தனர். எனவேதான் அவர்களுக்குள்ளான விவாதங்கள் வன்மமாயும், குரோதமாயும் மாறாமல் தற்கரீதியிலான கோபம்மட்டுமேயாய் இருந்தது.

இன்று பெரும்பாலான டீ கடைகளில் செய்தித்தாள்களே வாங்குவதில்லை. பெரும்பாலான செய்தித்தாள்களில் ( ஆரோக்கியமான )அரசியலே இல்லை. கட்சிகளுக்குள் நிலவும்(உலவும்) காழ்ப்பொணர்ச்சிகளாலும், குண்டர்படைகளாலும் இவ்வாறான விவாதங்கள், விமர்சனங்கள் வன்முறையில் முடிகின்றன. கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிகள் இருப்பதால் நியாமான சில கேள்விகளும், சந்தேகங்களும் பிற கோஷ்டியினரால் முளையிலேயே களையப்படுகிறது.

இந்நிலையில் தீவிர அரசியல் விமர்சனம் என்பது முகம்தெரியா யாரோசிலர் தங்கள் வலைப்பூவின் குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வதோடு முடிந்துவிடுகிறது. சமூக ஆர்வலர்கள் சிலர் தனியார் தொலைக்காட்சிகளில் தோன்றி (பெரும்பாலும் இத்தகைய நிகழ்ச்சிகளை முன்முடிவுகளோடே துவக்கி  அவர்கள் நினைத்த திசையிலேயே முடித்தும்விடுவார்கள் )  சில திவிரமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டாலும் நிகழ்ச்சியின் நேரமேளாண்மை காரணமாக அவை பாதியிலேயே தடுக்கப்பட்டு அடுத்தவருக்கு தாவிவிடுகிறது. டிவிட்டர் போன்ற இணையதள அரசியலோ கமலஹாசனின் காமடிவசனங்கள்போல் மேலோட்டமானவைகளாகவே இருக்கின்றன. இந்தசூழ்நிலையில் ஆரோக்கியமான அரசியல் விவாதம் என்பது...... ???????????????

Monday, August 13, 2012

ஒரு சிறிய சுயநலம்


"நியாயத்தின் குரலை
நாம் கேட்கத் தொடங்கும்போது
ஒரு சிறிய சுயநலம்
நம்மைச் சுற்றியுள்ள இரைச்சல்களை
அதிகப்படுத்திவிடுகிறது"


மனுஷ்யபுத்திரனின் இந்த கவிதைவரிகள் தனிமனித மனத்தின் வெளிப்பாடாய் தொன்றினாலும்  பெரும்பாலும் அது எல்லா மனிதருக்கும், காலத்திற்கும், தேசத்திற்கும், சூழ்நிலைக்கும் பொருந்துவதாய் அமைந்துவிடுவது சிறப்பு.

நாம் அன்றாடம் சந்திக்கும் எந்த அவலத்திற்கு பின்னாலும் தர்கரீதியாய் ஒரு நியாயமீரல் (நியாயமீரல் என்றாலே அது அநியாயம்தானே?)  இருக்கத்தான்செய்கிறது. ஆனால் மனம் அந்த அநியாயத்தை உணரவிடாமல்தடுக்க அதிகாரவர்கத்தின் கைக்கூலிகள் அவர்களுக்கு சாதகமான காரணிகளால் கட்டமைக்கப்பட்ட காரண‌த்தையே நம்பும்படி நம்மை கட்டாயப்படுத்துகிறார்கள்.

சென்றமுறை உள்ளாட்சித்தேர்தலில் சுயேச்சையாய் போட்டியிட்டு வென்ற ஒரு கவுன்சிலர் இந்தமுறை தோற்றுப்போகிறார், இத்தனைக்கும் அவர் கவுன்சிலராய் இருந்த காலத்தில்தான் பொதுக்கிணறு தூர்வாரப்பட்டு குடிநீர் அனைத்துபகுதிகளுக்கும் வினியோகிக்கப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் காலைக்கடன் கழிக்க வெட்டவெளிகளில் இருட்டோட ஒதுங்கவேண்டியிருந்தநிலையில் பகல்வேளை வயிற்றைப்பிசைந்தால் எங்கேபோவதென கையைப்பிசைந்துகொண்டிருக்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே கழிப்பிடமும், அதற்குத்தேவையான‌ தண்ணீர் வசதியும் அமைத்துகொடுத்ததும் அவர்தான். ஒரே நியாவிலைக்கடையில் அதிகப்படியான குடும்ப‌அட்டைகள் இருந்தபடியால் ஏற்ப்பட்ட கூட்டநெரிசலையும் அதனால் மக்கள்படும் அவதியையும் தவிர்க்கவேண்டி மேலிடங்களுக்கு கடிதங்கள் மூலமும் கையொப்பங்கள் மூலமும் உண்மையிலேயே போராடி 3 புதியகடைகளை திறக்கவைத்து சாதனைசெய்தார். ஆனால் அதையெல்லாம் மறந்த மக்கள் இந்தமுறை வேருஒருவரை கவுன்சிலராக்கிமகிழ்ந்தனர். காரணம் அவர் சுயேச்சையாய் வெற்றிபெற்றதை விரும்பாத அரசு( அவர் மட்டுமல்ல யார் சுயேச்சையாக வென்றாலும் எந்தகட்சிக்கும் பிடிக்காது. ஒன்று அவரை தன் கட்சிக்கு இழுக்கப்பார்க்கும் அல்லது அவரை அவர் வேலையை செய்யவிடாமல் தடுக்கும். இதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என எந்தபேதமும் இல்லை) அவருக்கு போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்பதுநிஜம். இதனால் கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச தொலைக்காட்சிபெட்டி ஆகியவை பெற்றுத்தருவதில் காலதாமதம் ஏற்ப்பட்டது, பெரும்பாலானவர்களுக்கு அது கிடைக்காமலேயேபோனது. அதற்குக்காரணம் அவரில்லை என்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருக்கவில்லை. நல்லவை பல செய்திருந்தாலும் இந்த ஒரு காரணம் மட்டுமே அடுத்தமுறை அவரை தோற்றுப்போகச்செய்தது எனபதுதான் உண்மை. நமக்கு டீவி கிடைக்கவில்லை என்ற ஒட்டுமொத்த சுயநல இரைச்சலில் நியாயத்தின் குரல் கேட்காமல் போய்விட்டது.  இதன் விளைவாய் நிகழக்கூடியது,

1 அந்த சுயேச்சை அரசியலிலிருந்து விலகலாம்,

2 அடுத்தமுறை ஏதாவது கட்சியின் சார்பில் மக்களுக்கு நேரடியாய் ஓட்டுக்கு 500ரோ 1000மோ கொடுத்து போட்டியில் செயித்து அனைத்து நலத்திட்டங்களுக்கான நிதியையும் தனக்கும் தன்சார்ந்தவர்களுக்கும் ஒதுக்கிவிட்டு நிம்மதியாய் இருக்கலாம்.

இது தேவையா?


Thursday, May 24, 2012

அறம் செய்ய விரும்பு


"தருமம் தலைகாக்கும்"னு சொன்னா

"அப்போ ஹெல்மெட் போடமலேயே  போலாமா"ங்கறான் ஒருத்தன்.

'எவன்கிட்ட மாட்ட‌றயோ அவனுக்கு 50 ரூ தர்மம் பண்ணிட்டா(பிச்சை) தாராளமா போலாங்கறான்' இன்னொருத்தன்.

வீடுகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பழைய துணிமணிகளை இப்படித்தான் அனாதை இல்லங்களுக்கு தள்ளிவிடுவதும், சுபநிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமாய்போகும் சாப்பாட்டை சிறுவர் இல்லங்களுக்கு கொடுத்துவிடுவதும், அய்யா தருமம்பன்னுங்க சாமின்னு கேக்கறவங்க முகத்தைக்கூட பார்க்காமல் அல்லது பார்க்கபிடிக்காமல் 1 ரூபாயோ 2 ரூபாயோ போட்ட்டுட்டு போவதுமே தருமம்ன்னு நம்பிகிட்டிருக்கோம். உண்மையில் தருமம் பிறர்கேட்டு கொடுப்பது அல்ல. காலம் அறிந்து சமயமறிந்து நாமாகவே தரக்கூடியது. தரக்கூடியதுங்கறதுகூட ஏதோ ஒருவித உயர்நிலையை காட்டுகிறது எனவே அந்த வார்தைகூட வேண்டாம் செய்யக்கூடியது (உதவி)  என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும். அப்படி செய்யற உதவியை மனநிறைவோட‌ செய்யனும். எந்த விஷயத்திலும் மனநிறைவு வரனும்னா அதை நாம் விரும்பி செய்யனும், இதைதான் அறம் செய்ய விரும்பு சொன்னாங்க ஒளவையார்.


அறம் செய்ய விரும்புன்னு சொன்ன அதே தமிழ் கூறும் நல்லுலகம்தான் (அதே ஒள‌வையார் தான்னு சொல்லி இருப்பேன் ஆனா அவ்வையார்ங்கறது ஒருத்தர் இலலை வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த புலவர்கள்னு சொல்றாங்க‌ நமக்கெதுக்கு வம்பு)ஏற்பது இகழ்ச்சின்னும் சொல்லியிருக்கு. ஏற்பது இகழ்ச்சிங்கற வரி பிறர்கிட்ட தானமோ உதவியோ கேட்கும் நிலையில் இருப்பவர்களிடம் அப்படியெல்லாம் கேட்கக்கூடாது அது ஒரு மானக்கேடான விஷயம் அதனால யாரும் கையேந்தி நிக்ககூடாதுனு சொல்ற‌ அட்வைஸ்போல தெரிந்தாலும் உன்மையில் ஒள‌வை இந்த வரிகளை கையேந்தி நிற்பவர்களிடம் சொல்லியிருக்கமாட்டார் என்றுதான் எனக்கு தோனுது. ஏன்னா பிச்சை எடுப்பவனிடம் பிச்சை எடுப்பது அசிங்கம் அவமானம்ன்னு சொல்வதால் எந்த புண்ணியமும் இருக்கப்போவதில்லை.(நானும் பிச்சைங்கற லெவல்லயே பேசுவதாக‌ நினைக்கவேண்டாம் ஒரு புரிதலுக்காகவேண்டிதான்). ஆக ஒளவையார் தேசாந்திரியாக சுற்றிக்கொண்டிருக்கையில் பார்க்க நேர்ந்த வறுமையை மக்களின் மீளமுடியாத்துயரை கண்டு மக்களின் இந்நிலைக்கு மக்கள்மேல் அக்கறையில்லாத அரசனும் சுயநலமிக்க செல்வந்தர்களும்தான் காரணம் என அறிந்து தான் சந்திக்கும் அரசர்களிடமும், செல்வந்தர்களிடமும் 'ஏம்பா உன் ஆட்சியில இத்தினிபேரு இத்தினி அவஸ்த்தைப்படராங்க இது உனுக்கு அசிங்கமா இல்லையா? அவங்க இந்த நிலமையில இருப்பதற்கு உன் ஆட்சிதானே காரணம் இது உனக்கு அவமானமா இல்லையா? அதால தருமம் பண்ண பழகிக்கோ அவங்க ஏற்பது உனக்கு இகழ்ச்சின்னு செவுட்டுல அறையராமாதிரி சொல்லியிருக்காங்கன்னு எனக்கு தோனுது. உங்களுக்கு எப்படி?

Sunday, May 20, 2012

அம்பெத்கார் ...டூன்

சர்ச்சைக்குரிய நேரு, அம்பெத்கார் கார்டூனை நீக்கக்கோரி எழுந்த பெருத்த அமளிக்குப்பின் அக்கார்டூன்களை பாடதிட்டத்திலிருந்து நீக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியே. பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சி MP க்களும் ஒட்டுமொத்தமாய் குரல் கொடுத்திருப்பதைபார்து யாரும் பூரித்துபோய்விடத்தேவையில்லை, திருமாவளவன் போன்ற தலித்மக்களின் தலைவர்கள் இந்த சர்ச்சையை எழுப்பியதற்கும் மற்ற MP க்கள் அதற்கு ஆதரவாய் குரல்கொடுத்ததற்கும் உள்ள வித்தியாசம், மற்றகட்சிக்கு இது தலித்மக்களின் வாக்கு வங்கியை பங்குபோட்டுக்கொள்ள உதவும் இன்னொரு விஷயம். ஆனால் தலித்மக்களைப் பொருத்தவரை கடந்த நூற்றாண்டுகால அனுபவங்களும் அவமதிப்புக்களும் இன்றும் இவ்வாறான நவீனமுறைகளில் அறங்கேரிக்கொண்டுதான் இருகின்றது அதன் ஒரு பரிமாண‌மாய்தான் தாங்கள் கடவுளாக கருதும் பாபா சாகிலை மாணவர்கள்  மத்தியில் அகவுரவப்படுத்துவதற்காகவே இந்த கார்டூன் சேர்க்கப்பட்டிருக்குமோ என எண்ணவைப்பது இயல்புதான் என்பதை நாம் ஒப்புக்கொள்த்தான் வேண்டும். சம்பந்தபட்ட கார்டூனில் நேரு காண்ஸ்டிடூஷனை விரட்டினாரா அம்பெத்காரை விரட்டினாரா என்பது அன்றைய அரசியல் தெரிதவர்களுக்குத்தான் விளங்கியிருக்கும், இன்று இதை ஒரு பொதுவான புரிதலுடன் பார்போமேயானால் அம்பெத்கார் நத்தையை விரட்டுகிறார் நேரு அம்பெத்காரை விரட்டுகிறார்  என்றுதான் புரிந்துகொள்ளப்ப்டும்.

1995ல் வெளியாகிய முத்து திரைப்படம் அன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்களால் புரிந்துகொள்ள‌ப்பட்ட விதத்திற்கும் இன்றைய தலைமுறை அதை புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.இதை புரிந்துகொண்டால்தான் இந்த கார்டூனை நீக்கக்கோருபவர்களின் மனநிலையும் புரியும்.

Tuesday, May 15, 2012

நானும் பா(ர)திகாணி நிலம் வேண்டும்
குறைந்தது
கால் கிரவுண்டாவது வேண்டும்.
கார்ணர் பீஸாய் வேண்டும்,
அப்ரூவரோடு, பட்டா, சிட்டா
அடங்கலும் வேண்டும் -
அக்கம் பக்கம் சுற்றிலும்
ஆள்நடமாட்டம் வேண்டும்.
ஆபீஸிற்கு பக்கத்திலே வேண்டும்,
என் பட்ஜெட்டிற்குள்ளேயும் வேண்டும்.
மண் வளம் வேண்டும்,
மரங்கள் அடர்ந்த சாலையும் வேண்டும்,
இணக்கமான உறவுடன்
எதிர் வீடு வேண்டும்,
நடைபயிலும் தூரத்தில்
நல்ல பள்ளியும் வேண்டும்.
எக்காலத்திலும் தடைபடாத‌
குடிநீர் வேண்டும்.
கண்சிமிட்டாமல் எரியும்
தெரு விளக்கு வேண்டும்.
இறவில் உலவும் கூர்க்கா வேண்டும்,
பின் இர‌வில் வரநேர்ந்தால்
குறைக்காத தெருநாயும் வேண்டும்.

இவையாவும் கிடைகாதவரை
நானும் பா(ர)தியே!


Monday, May 14, 2012

கல்யாண மாலையும் கம்மினாட்டி( community ) மீட்டிங்கும்

தமிழகத்தில் ஜாதி வெறிக்கு பலியான அப்பாவிகளின் ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் என்றாவது ஒருநாள் ஜாதி முற்றிலுமாய் ஒழிந்து தன் சந்ததியினராவது ஜாதித்தறாரால் கொல்லப்படாமல் நிம்மதியாய் வாழ்வார்கள் என்ற கனவோடு!!! உலவிக்கொண்டிருக்க‌ இல்லை இல்லை அது ஒரு பகல்கனவுதான் என சம்மட்டியால் ஓங்கியடித்து சத்தியம் செய்வதைப்போல் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது அரசு.

ஜாதி ஒழியவேண்டும் ஜாதி ஒழியவேண்டும் என்று வாய்கிழிய பேசினாலும் ஒவ்வொரு ஜாதி மக்களும் அதன் தலைவர்களும் ஜாதியை அழிந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டிருக்கிண்றனர். உயர்ஜாதிகளாய் கருதப்படும் ஜாதி மக்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வதற்காக அரசின் ஜாதி வாரி கணக்கெடுப்பில் அவர்கள் ஜாதிக்குள்ளேயே உலவும் உட்பிரிவுகளை தங்களோடு இணைக்கக்கூடாது அல்லது இணைக்கவேண்டும் என பல க்ருத்தாக்கங்களை உருவாக்கிவருகிறனர். தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்படும் ஜாதிகள் தங்களுக்குள் நிலவும் உட்பிரிவுகளை தனித்தனி அடையாளங்களோடு ஒப்பிட்டு அவற்றை தனி கரிசன‌த்தோடு அனுகவேண்டும் என்று கோரிகை வைக்கின்றனர்.    உள்ளபடியே ஜாதி வேண்டுமா?  வேண்டாமா? எனும் விவாதங்கள் ஏற‌த்தாழ எல்லா தனியார் தொலைக்காட்சிகளிலும் காணக்கிடைக்கின்றன.ஜாதிகளற்ற சமூகம் வளரவேண்டி ஒருபுரம் கலப்புத்திருமண‌த்தை ஆதரித்தும், அதிகரிக்கச் செய்யவேண்டியும் அத்தம்பதியினருக்கு அரசு ஊக்கத்தொகையும் அளித்துவரும் அதேவேளையில் சமீபகாலங்களில் ஜாதிவாரியான திருமண தகவல் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன‌.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண தகவல் மையமாக செயல்ப்ட்டுக்கொண்டிருக்கும் கல்யாணமாலை ஜாதிவளர்ப்பு மையங்களின் தலையிடமாய் உருவெடுத்துள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. வருகிற 16-05-2012 அன்றும் குறிப்பிட்ட சில ஜாதிகளின் வரண்களுக்கான ஒருங்கமைவை நடத்தவுள்ளது. இதன்மூலம் ஜாதி வளருமோ? ஒழியுமோ? தெரியாது ஆனால் ஒருங்கிணைப்பாள‌ர்களின் கல்லா நிறையும் என்பதில் சந்தேகமில்லை.

ஜாதி ஒரு பணம்காய்க்கும் விருட்சம். அதை வேரொடு அழிக்க யாருக்குத்தான் மனம்வரும்?

Friday, May 11, 2012

இளிச்சவாய் இனா வானா க்களுக்கு.

நீங்கள் ஏன் N mart ல உறுப்பினரா சேரக்கூடாது?  இப்படித்தான் தொடங்கினார் அவர்

N mart னா என்ன?  கேள்வி கேட்காமல் இருந்திருக்கலாம் விதி யாரை விட்டது? 

அது ஒன்னுமில்லைங்க நீங்க மேல போட்டுக்கர சட்டைலேர்ந்து தரை பெறுக்கும் தொடப்பம் வரைக்கும் 500 வகையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?  இருக்கும்தானே?

ஆமா.. ஆமா..

அதுவும் மாசா மாசம் 250/- ரூ பொருட்கள் இலவசமாவும் கொடுத்து கூடவே 1500/- ரூ மதிப்பிலான பொருட்களுக்கு கடனும் கொடுத்தா நல்லதுதானே? இன்னிக்கு இருக்கிற் நெலமையில அண்னன் தம்பி கூட 5 பைசா தற‌தில்லை 1500/- ரூ கடன் 45 நாள்குள்ள திருப்பி கொடுத்துட்டு மறுபடியும் 1500/- ரூ கடன் வாங்கிக்கலாம்.

ஓ அப்படிங்களா? 

இன்னும் இருக்கு கேளுங்க 48 மாசத்துல 72000/- ரூ மதிப்பில் பொருட்கள் வாங்கிட்டீங்கன்னா 11 000/- ரூ திருப்பித்தந்துடுவாங்க.

ம்..ம்ம்..

நீங்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான் 5500/- ரூ கட்டி உறுப்பினரா சேந்துட்டீங்கன்னா உங்களுக்கு அதே 5500/- ரூ மதிப்பில் கோட் சூட் கொடுத்துடுவாங்க, கூடவே CD யும் Kit Package ம் கிடைக்கும்.

என்னது 5500/- ரூவாயா? அடிக்கிர வெய்யில்ல நீ கொடுக்கர கோட்டையும் சூட்டையும் போட்டுகிட்டு நான் என்ன அனில் அம்பானியோட மீட்டிங் பேசப்போறேனா இல்லன்னா உதயநீதி ஸ்டாலின் போல மோத்வானியோட பாலைவனத்துல டேன்ஸ்தான் ஆடப்போரேனா?  போங்கடா கொய்யாளுங்களா. அதவிடு நான் மளிகை சாமான் வாங்கபோறேன் அவன் கொடுக்கப்போறான் நடுவுல எதுக்கு 5500/- ரூ அதுக்கு பதிலா 2 கிராம் தங்கம் வாங்கி வெச்சா 4 வருஷத்துல அதுவாவே 15000/- ரூ வந்துடப்போவுது எங்கயும் விக்கமுடியாத கோட்டை எந்தலையில கட்டப்பாக்கறயா? ஒழுங்கு மரியாதையா எழுந்து ஓடிடு மவன.  இப்படியெல்லாம் சொல்லத்துடித்தது மனது. ஆனா அவர் என்ன செய்வார் பாவம் சீக்கரமா பணக்காரனா ஆயிடனும்ம்னு எல்லாரும் ஆசைப்படுவதுபோலத்தானே அவரும் நினைக்கிறார்.

ஆனா இவரை இப்படியே விட்டா நாளையும் தொந்தரவு செய்வார் அதனால நல்ல திட்டம்தான் சார் இதில Helthcare products இருக்கா சார்? நான் ஒரு பிட்டை போட்டேன்.

Helthcare product டா? இது அவர் விதி.

ஆமாம் சார் இன்னிக்கி மக்கள் மத்தியில உடல்நலம் பத்தி நல்ல விழிப்புணர்வு வந்திருக்கு அதுக்குத்தான் AMWAY நிறுவனம் தரமான உடல்நலம் சார்ந்த பொருட்களை அவங்களே தயாரிச்சு குறைஞ்ச விலையில கொடுக்கராங்க. நீங்கசொன்ன அதே கான்ஸ்செப்ட்தான் நாம பொருட்களை உபயோகிச்சுட்டு மத்தவங்களுக்கு எடுத்துச்சொல்லி அவங்களையும் வாங்கவைக்கனும் அவ்வளவுதான். இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்னேவொன்னுதான் 45 நாள்ள 50 யூனிட் business பண்ணீங்கன்னா உங்களுக்கு some amount  செக் வரும். ஒரு யூனிட்டுங்கரது 70/-ரூ அதாவது 3500/-. ரூவாக்கு நீங்க வாங்கர பொருளும் உங்க business வேல்யூம்ல கணக்குவந்துடும். வேரு ஒரு நண்பர் Amway பற்றி சொன்னதை இவரிடம் ஒப்பித்தேன் அவர் முகம் லேசாய் இருண்டது. கொஞ்சநேரத்திலேயே நான் வறேன் சார்னு கிளம்பிட்டார்.  இனி இந்தப்பக்கம் வர்மாட்டார்ன்னு நினைக்கிறேன். பாப்பம்.  

Wednesday, May 9, 2012

Eve Teasing

 06-05-12 நீயா நானாவில் பெண்கள் கிண்டலடிக்கப்படுவதற்கும் உடல்ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகப்படுவதற்கும் அவர்களின் நவநாகரீக ஆடையும் ஒரு காரணமா?  என்ற விவாதத்தில் கவிஞர் குட்டி ரேவதியை பார்க்கமுடிந்தது.

இந்த கேள்விக்கு ஆண்கள் அத்தனை பேரும் ஆமாம்னுதான் சொன்னாங்க. ஒரு டாக்டர் உட்பட. அவர் சொன்னவிதம் அவர் எடுத்துவைத்த உதாரணங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் அவர் வாதத்திற்கு துணைநின்றாலும் அதை குட்டி ரேவதி மிகத்தீவிரமாக மறுத்தடோடல்லாமல் இவ்வாறான கணக்கெடுப்புக்கள் மக்கள் மனதில் ஒரு பொது புத்தியை ஏற்படுத்தவேண்டி அரசு மற்றும் நிறுவனங்களாள் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்பதையும் சுட்டிக்காட்டியது, புள்ளிவிவரங்களுக்குப பின்னால் பல பெரும்புள்ளிகள் இயங்குவதை புரிந்துகொள்ள முடிந்தது.

பெண்கள் பாலிய‌ல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகக்கூடிய காரணத்திற்கு நிகழ்ச்சியில் ஒருவர் மட்டும் நவநாகரீக உடையணியும் பெண்களை பார்க்கநேரும் "நபர் சாதக‌மான மனநிலையில் இல்லையென்றால் அது sexual harassment க்கு இட்டுச்செல்லும்" என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள்க்கூடிய ஆனால் எவருமே சுட்டிக்காட்டாத விஷயத்தை சொன்னார். அதை அரங்கத்திலிருந்தவர்களேகூட கண்டுகொள்ளவில்லை. இந்த வரிகளுக்குப்பின்னால் சமூகத்தில் பொறுப்புமிக்க இடத்தில் சில பொறுக்கிகளும் மனநோயாளிகளும் இருந்துகொண்டு பெண்களைப்பற்றிய கொச்சையான மதிப்பீடுகளை ஏற்படுத்தும் விதமாய் படம் எடுப்பதும் பாடல் வரிகளை எழுதுவதும், அறிக்கைவிடுவதையும் செய்யவிட்டுவிட்டு அதை ஊடகங்கள் மற்றும் இளைஞர்கள் ஆதர்ஷ்யமாய் கருதும் நாயகனின், தலைவனின் மூலம் பரவச்செய்து அதனால் பெரும் ஆதாயமும் அடைந்தபின் அவர்களைத்தொடரும் அப்பாவி தொண்டனய் ரசிகனய்மட்டும் குறை சொல்லிக்கொண்டிருப்பது எந்தவகையில் நியாயமாகும் என கேட்கநினைத்திருப்பார் என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் குட்டிரேவதி சொன்னதைப்போல் இந்தவிவாதத்தை அடுத்த கட்டத்திற்கு அல்லது ஆழத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய கணம் "சாதக‌மான மனநிலையில் இல்லையென்றால் அது sexual harassment க்கு இட்டுச்செல்லும்" என்ற வரிகளில் இருந்த்தாய் நான் உண‌ர்கிறேன். 
   

நீங்கள் இதையும் விரும்பக்கூடும்