ஏதேன்


விலக்கப்பட்டதாய்
அறிவிக்கப்பட்ட அடுத்தநொடி
உதடுசுழித்து சிரித்தாள் ஏவாள்
ஆதாமை நோக்கி!
அனுமதியின்றி எழுந்துபோனான்
அவனும் முதுகுகாட்டி!

தெரிவித்திருக்கக்கூடும்
சாத்தான்
என் தந்திரத்தை
முன்கூட்டியே!

பிறிதொருநாளில்
வெறியோடு உலுக்கிக்கொண்டிருந்தான்
ஆதாம்
விஷ விருக்ஷ்த்தின் வேர்களை.

ஆவலோடு
ருசித்துக்கொண்டிருந்தாள்
ஏவாள்
உதிரத்தொடங்கிய கனிகளை.

ந(க)ர(க)மாக மாற‌த்தொடங்கியது
ஏதேன்.

நகர்ந்துவிட்டேன் அங்கிருந்து.


Comments