ஐ ஐ டி மாணவி ஃபதிமா லத்தீஃப் நினைவாக




 

கேட்டபோது கேட்காத,
தட்டியபோது திறக்காத
காதுகளும், கதவுகளும் - எம்
மெய்வருத்த கூலிக்கு
திறந்தே தீரவேண்டிய
நிர்பந்தம் அதிரச்செய்கிறது
உங்கள் சமநிலையை !
 
இது
அனைவருக்குமான வழிதான்
என வாய் வழிமொழிந்தாலும்
வாசலைவிட்டு அகலுவதில்லை
மறித்துக்கொண்டிருக்கும் உங்கள் கைகள்.
 
நெட்டித்தள்ளி உள்ளே சென்றுவிட்டால்
வெளிச்சம் காட்டும் மெழுகுவத்தியை
ஒளித்து விளையாடுகிறீர்கள்.
 
இருள் பழகி நிதானிக்கும்முன்
இடித்துக்கொண்டாலோ, இடறிவிழுந்தாலோ
கண்ணில் ஏதோ கோளாறு எனச்சொல்லி
வெளியேற்றத் துடிக்கிறீர்கள்.
 
போதும் இத்தோடாவது
நிறுத்திக்கொள்ளுங்கள்
வாய்ப்புகள் இங்கே
அனைவருக்கும் சம்மாய்த்தான்
வழங்கப்பட்டிருக்கிறது என்ற
அபத்தத்தை.



Comments

  1. காரணமான ஆசிரியரின் ஆறடி உருவம் இன்னும் மறக்கமுடியாமல் மனதில் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நாமும் கையாலாகாதவர்களாகவேதான் இருக்கிறோம்.

      Delete

Post a Comment