ஏனோ தெரியவில்லை?

இனி
எப்போதுமே
அழைக்கமுடியாது
என அறிந்தும்
அழிக்கமுடிவதில்லை
சில எண்களை - கைபேசியிலிருந்து.

இனி
எப்போதுமே
செல்லமுடியாது என அறிந்தும்
கிழிக்கமுடிவதில்லை
சில முகவரிகளை - டைரியிலிருந்து.

இனி
ஒருநாளும்
அவன் முகத்துல முழிக்ககூடாது
என முடிவெடுத்திருந்தும்
எப்போதாவது ஒருமுறை
புரட்டாமல் இருக்கமுடிவதில்லை
அவனிருக்கும் - ஆல்பத்தை.

Comments

 1. மிக அற்புதமான கவிதை... சுருங்கச்சொன்னாலும் உள்ளத்தின் உணர்வுகளை அழகாய் படம் பிடித்துச்சொன்னது... மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி.

   Delete
 2. மிகவும் அருமை... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி.உங்களை பதிவர் திருவிழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

   Delete
 3. யதார்த்தம் பிரதிபலிக்கும் கவிதை.
  உங்களை பதிவர் திருவிழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் மகிழ்ச்சியே, நன்றி சார்

   Delete
 4. சென்ற வாரம் எனது ரசனையின் டாப் வரிசையில் இடம் பிடித்த இந்தக்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
  http://jeevanathigal.blogspot.com/2013/09/02-to-08-09-2013.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ரசனைக்கு நன்றிகள்.

   Delete
 5. அருமையான கவிதை..ஏனோ தெரியவில்லை..... அன்பினால் தைத்த உறவுகளை அவ்வளவு எளிதில் பிரித்து எறிந்து விட முடியாது....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். பதிவர் சந்திப்பில் எட்டத்திலிருந்தே உங்களை கண்டதில் மகிழ்ச்சி.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 6. அன்பின் அகலிகன் - கவிதை அருமை

  சில நட்புகளை - உறவுகளைத் தவிர்க்க இயலாது - பல காரணங்களீனால் பிடிக்காமல் போய் விட்டாலும்.

  சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. அன்பின் அகலிகன் - கவிதை அருமை

  சில நட்புகளை - உறவுகளைத் தவிர்க்க இயலாது - பல காரணங்களீனால் பிடிக்காமல் போய் விட்டாலும்.

  சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment