மூன்றாம் உலகநாடுகளின் சந்தை



கண்ணைவிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றாம் உலகநாடுகளின் சந்தையும்.

உலகப்பெருமுதலாளிகளின் லாபவெறிக்கு தன் கண்னைமட்டுமல்ல உயிரையே கொடுத்துக்கொண்டிருப்பதுதான் மூன்றாம் உலக நாடுகள்.
வென்றவன் எழுதுவதே சரித்திரம் என்பதால் முதலாளிகளோடு ஒரு உரையாடல்.


"வனக்கம் முதலாளி!"

ஆங்.. ஆங்.. வணக்கம். என்ன இந்தப்பக்கம்?"

"ஒன்னுமில்லை சும்மா உங்களை பாத்துட்டுபோலாம்னுதான்...."

"என்ன விஷயமா?"

ஒன்னுமில்லை ஒலகமே உங்கள பாத்துகிட்டிருக்கு அதுல சிலரு தன் மூக்குமேல விரலைவைக்கிறான், சிலபேரு உங்க ....த்துலயே வெரலவிடுறான் இதை நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?"


"முதளாலித்துவத்தின் உயிர்நாடியே சந்தைதான். அதன் தொடர் இய‌க்கம் மட்டுமே எங்களின் ஒரே குறிக்கோள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செயத்தாயார்."

"  அப்படியா என்ன செய்வீர்கள்?
"
போபாலில் பல ஆயிரம்பேரை கொள்வோம்."

"ஏன் அப்படி?"
"

"மூன்றாம் உலக நாடான உங்கள் தேசத்தில் குறைந்த மாசுக்கேடே ஏற்ப்பட்டுள்ளது . இதனால் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளிப்படும் மாசை உங்கள் தேசத்திற்கு நகர்த்துவது என்று முடிவு செய்தோம். அதன் பலன் நீங்கள் அறிந்ததுதானே?"

"ஆமாம்! ஆமாம்! அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நிவாரணத்தொகைக்கூட கிடைக்கவில்லை. சரி வேறு?"


" தூத்துக்குடியில் உள்ள STERLITE ஆலையில் காப்பரில் இருந்து அதனுடன் கலக்கும் பிர தாதுக்களை பிரிக்கும் பணியால் கல்லீரல் புற்று நோயை உண்டாகும் என‌த்தெரிந்ததனால் அந்தப்பணியை மூன்றாம் உலக நாடான உங்களுக்கு ஒதுக்கிவிட்டோம்."

"அவ்வளவுதானா?"

"என்ன இப்படி கேட்டுக்கீங்க உலகின் வளர்ந்த நாடுகள் அனு உலைகள் வேண்டாம்னு முடிவெடுத்த உடனே எங்கமூட்டை முடிச்சுக்களை தூக்கிகிட்டு உங்ககிட்டதானே வந்தோம்."

"ஆனா இங்கவுள்ள‌ அனு உலைகள் ரொம்ப பாதுகாப்பானதுன்னு எங்க அரசியல்வாதிகளும் அறிவாளிகளும் சொல்ராங்களே"

" ஆமா அப்படித்தான் நாங்க சொல்லச்சொல்லியிருக்கோம்"

"நல்லதா எதையுமே சொன்னதில்லையா?"

"ஏன் இல்லை?  90 களில் உலக அழகி பட்டமெல்லாம் கொடுத்தோமே மறந்துட்டீங்களா?

" உலக அழகி பட்டத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"

"சரியாப்போச்சு... உங்களுக்கு உலக அழகி பட்டம் கொடுத்ததாலதான் இன்னிக்கி எங்க அழகுசாதன பொருட்களுக்க்கான சந்தையில் நீங்கள் முக்கிய பங்கு எடுத்துகிட்டிருக்கீங்க. இன்னிக்கு சந்துக்கு சந்து இவ்வளவு பியூட்டி பார்லர் இருக்கே அதுக்கு யார் காரணம்? நாங்கதான்."

"இதெல்லாம் எங்க மக்களுக்கு தெரியுமா?"


" தெரியாது. தெரிஞ்சாமட்டும் என்ன பண்ணிடுவீங்க?
அதற்குள் செல்போன் மணி அடிக்க‌

" அலோ ஆங்.. ஆங்... கேக்குது சிரியால...  புணர்நிர்மாண பணிகளுக்காக....  உலக வங்கி..... கடன் உதவி அளிக்குதா?  இதோ வந்துட்டேன்." போனை வைத்துவிட்டு "ஏய் மேன் உங்கூடபேச நேரமில்லை இதைப்பத்தி நாம இன்னொருநாள் விலாவரியா பேசலாம். இப்ப நீ கிளம்பு"

" சரிங்க முதலாளி நான் வாரேன்"






Comments

  1. நுகர்வு கலாச்சாரம் என்பதை உருவாக்குவது கடினம். ஒரு முறை ஒரு நிறுவனம் உருவாக்கி விட்டால் வளரந்து கொண்டுருக்கும் நாடுகளில் வாழும் மனிதர்கள் மீண்டு வருவது கடினம்.

    இந்தியா இந்த விசயத்தில் முன்னாடி நிற்கின்றது.

    ReplyDelete
  2. தங்கள் தொடர் வாசிப்பிற்கு மகிழ்ச்சி ஜி.

    ReplyDelete

Post a Comment