அஞ்சுதற்கு அஞ்சாமை !

அஞ்சுதற்கு அஞ்சாமை பேதமை – பயப்படவேண்டியதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம்.

கரப்பான்பூச்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அதன் மீசையை பிடித்தே தூக்கிபோட்டுடலாம். அதே ஒரு பாம்பு நாக்க நீட்டி நீட்டி படமெடுத்து ஆடும்போது இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைன்னு சொல்லி அதன் வாலை புடிச்சுகூட தூக்கிபோடமுடியாது. ஏன்னா பாம்புன்னாலே பயம். ஆங் இது இன்னா மேட்டரு நான் போடறேன் பார்னு சொல்றவவனைத்தான் ’முட்டாள்னு’ சொல்றாங்க அவ்வை.

பாம்புன்னா நமக்கு ஏன் பயம்? அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும்? ஏன்னா எந்த பாம்பு விஷப்பாம்பு எது தண்ணி பாம்புன்னு நமக்கு தெரியாது, பாம்பு விஷயத்தில நாம அஜாக்கிரதையா இருந்துடக்கூடாதேங்ற நல்ல எண்ணத்தில்தான் “பாம்புன்னா படையே நடுங்கும்” நீயும் நானும் எம்மாத்திரம்னு பழமொழி சொல்லி அந்த பயத்தை தக்கவச்சிருக்காங்க.

இந்த பயம்தான் பாம்புகிட்டேர்ந்து நம்மை காப்பாத்திகிட்டிருக்கு என்பது உண்மைதான். ஆனால் அதே பயம்தான் பாம்புகளை நம்மிடமிருந்தும் காப்பாத்திகிட்டிருக்கு என்பதையும் நாம் புரிஞ்சுக்கணும். இல்லைன்னா எல்லா பாம்பையும் தோல்உறிச்சி ”பெல்ட்” ஆக்கிட்டிருப்போம். இயற்கை சமநிலை கெட்டுவிடக்கூடாதுன்னா பாம்புக்கு விஷமும் நமக்கு அதுமேல பயமும் இருந்துகிட்டே இருக்கனும்.

சட்டமும் அதுபோலதான். தப்புசெஞ்சா தண்டிக்கப்படுவோம்ன்னு பயம் இருக்கனும். அதவிட்டுட்டு தண்டணை எனப்படுவது யாதனில் தவறுசெய்தவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பாகவும் நல்வழிப்படுவதற்கான  சூழலை ஏற்படுத்தி தரக்கூடியதுமாகவும் இருக்கவேண்டும் ன்னெல்லாம் வியாக்கியானம் பேசிகிட்டிருந்தா ஒவ்வொருத்தனும் ஒரே ஒரு தப்பைபண்ணிட்டு நான் திருந்தவாய்ப்பு கொடுங்கன்னு கிளம்பிடுவான். அப்புறம் நாடே ஜெயில் ஆயிடும்.

நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சம்பந்தபட்ட ராணுவத்துல, துணைராணுவத்துல ஒரு குழுவில் ஒருத்தர் தப்பு செஞ்சாலும் மொத்த குழுவிற்குமே தண்டணை. அப்போதுதான் அடுத்தமுறை யாராவது தப்புசெய்ய நினைச்சாலோ, முயற்ச்சி செய்தாலோ மதவங்களால காட்டிக்குடுக்கப்படுறாங்க இல்லன்னா தடுக்கப்படறாங்க. இது குழுவிற்குள் தவறுகளை குறைத்து ஒழுக்கத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பை கவனிக்கவேண்டியவர்களிடம் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லைன்னா என்னவாகும். ஒழுக்கமுள்ள குழுக்களிடம்தான் நாட்டின் பாதுகாப்பை ஒப்படைக்கமுடியும். 

ஒழுக்கமுள்ள சமூகமே அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் எதையும் சிந்திக்கவும் செயல்படுத்தவும் முடியும். பாம்பின்மேல் ஏற்படுத்திவைத்திருக்கும் பயம் எப்படி பாம்பையும் நம்மையும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறதோ அப்படியே சட்டத்தின்மேல ஏற்படுத்திவைக்கும் பயமே சமூகத்தையும் குற்றங்களுக்கும், ஒழுக்கங்களுக்குமான சமநிலையை தக்கவைக்கும்.

Comments

  1. பயம் மட்டுமே காணாது,சட்டத்தின் மீதான நம்பிக்கையும் அதன் மீதான தெளிவுமே சரியாய் இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
  3. //ஒழுக்கமுள்ள சமூகமே அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் எதையும் சிந்திக்கவும் செயல்படுத்தவும் முடியும். பாம்பின்மேல் ஏற்படுத்திவைத்திருக்கும் பயம் எப்படி பாம்பையும் நம்மையும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறதோ அப்படியே சட்டத்தின்மேல ஏற்படுத்திவைக்கும் பயமே சமூகத்தையும் குற்றங்களுக்கும், ஒழுக்கங்களுக்குமான சமநிலையை தக்கவைக்கும்.//

    மிகவும் சிறந்த வரிகள் .....

    ReplyDelete

Post a Comment