Thursday, August 16, 2012

டீக்கடை விவாதம்"இவங்களயெல்லாம் செறுப்பால அடிக்கனுங்கறேன் '

"ஏய் அப்படியெல்லாம் வாய்க்குவந்தாப்பல ஒளரக்கூடாது சொல்லிபுட்டேன். எங்காளு ஒரு முடிவெடுக்கருண்ணா அதுல ஆயிரம் சமாச்சாரம் இருக்கும் அதையெல்லாம் உங்கிட்ட சொல்லிகிட்டிருக்கதேவையில்லை தெரிதா?"

"என்னத்த பெரிய புளியங்கா சமாச்சாரம் கொத்துகொத்தா மக்க செத்திகிட்டிருந்தப்போ வாயையும் ........த்தையும் பொத்திகிட்டுகெடந்துட்டு இப்போ கூட்டம் நடத்றேன்னா கேக்கறவன கேனப்.........டைனு நெனைக்கிரார உங்காளு

"எங்காளாச்சும் ஆரம்பத்துலேந்தே குரல் கொடுத்துட்டேத்தான் இருக்காப்பல, உங்காளுக்குத்தான் இப்ப திடீர்னு அவங்கமேல பாசம் பொத்துகிட்டுவருது. வீனா வாயகொடுத்து .....த்த புண்ணாக்கிக்காத ஆமா."

இப்படி நேருக்குநேர் சரமாரியாய் அரசியல் பேசி(ஏசி)க்கொண்டிருந்தகாலம் ஒன்று இருந்ததது அதற்கான மேடைகளாய் அமைந்தவை டீக்கடைகளும், பார்பர்ஷாப்புக்களுமே. இங்கே அரசியல் பேசக்கூடாதுனு போர்டுகூட எழுதிவெச்சிருப்பாங்க ஆனாலும் அங்க அரசியல் உழளும் தவிர்க்கவேமுடியாது. அன்னிக்கி செய்தித்தாள்களும் வானொலியும் மட்டுமே செய்திகளை பரப்பிகிட்டிருந்ததால ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் இடையில நிறையகால அவகாசம் இருந்தது அந்த அவகாசம் நிறைய அனுமானங்களை கொடுத்தது அதனால் தொண்டர்கள் அதைப்பற்றி பேச விவாதிக்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால் தொண்டர்களின் அனுமானங்கள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கும். காரணம் அன்று கட்சியென்பது ஒரு கூட்டுக்குடும்பம். அதில் ஒரு தார்மீகம் இருந்தது. அந்த தார்மீக்த்தின் அடிப்படையில் முடிவுகளும், முழக்கங்களும் அமைந்தன. ஆகையினாலேயே அடிமட்ட தொண்டனும் தலைவனும் நெருக்கமானவர்களாய் இருந்தனர். எனவேதான் அவர்களுக்குள்ளான விவாதங்கள் வன்மமாயும், குரோதமாயும் மாறாமல் தற்கரீதியிலான கோபம்மட்டுமேயாய் இருந்தது.

இன்று பெரும்பாலான டீ கடைகளில் செய்தித்தாள்களே வாங்குவதில்லை. பெரும்பாலான செய்தித்தாள்களில் ( ஆரோக்கியமான )அரசியலே இல்லை. கட்சிகளுக்குள் நிலவும்(உலவும்) காழ்ப்பொணர்ச்சிகளாலும், குண்டர்படைகளாலும் இவ்வாறான விவாதங்கள், விமர்சனங்கள் வன்முறையில் முடிகின்றன. கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிகள் இருப்பதால் நியாமான சில கேள்விகளும், சந்தேகங்களும் பிற கோஷ்டியினரால் முளையிலேயே களையப்படுகிறது.

இந்நிலையில் தீவிர அரசியல் விமர்சனம் என்பது முகம்தெரியா யாரோசிலர் தங்கள் வலைப்பூவின் குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வதோடு முடிந்துவிடுகிறது. சமூக ஆர்வலர்கள் சிலர் தனியார் தொலைக்காட்சிகளில் தோன்றி (பெரும்பாலும் இத்தகைய நிகழ்ச்சிகளை முன்முடிவுகளோடே துவக்கி  அவர்கள் நினைத்த திசையிலேயே முடித்தும்விடுவார்கள் )  சில திவிரமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டாலும் நிகழ்ச்சியின் நேரமேளாண்மை காரணமாக அவை பாதியிலேயே தடுக்கப்பட்டு அடுத்தவருக்கு தாவிவிடுகிறது. டிவிட்டர் போன்ற இணையதள அரசியலோ கமலஹாசனின் காமடிவசனங்கள்போல் மேலோட்டமானவைகளாகவே இருக்கின்றன. இந்தசூழ்நிலையில் ஆரோக்கியமான அரசியல் விவாதம் என்பது...... ???????????????

Monday, August 13, 2012

ஒரு சிறிய சுயநலம்


"நியாயத்தின் குரலை
நாம் கேட்கத் தொடங்கும்போது
ஒரு சிறிய சுயநலம்
நம்மைச் சுற்றியுள்ள இரைச்சல்களை
அதிகப்படுத்திவிடுகிறது"


மனுஷ்யபுத்திரனின் இந்த கவிதைவரிகள் தனிமனித மனத்தின் வெளிப்பாடாய் தொன்றினாலும்  பெரும்பாலும் அது எல்லா மனிதருக்கும், காலத்திற்கும், தேசத்திற்கும், சூழ்நிலைக்கும் பொருந்துவதாய் அமைந்துவிடுவது சிறப்பு.

நாம் அன்றாடம் சந்திக்கும் எந்த அவலத்திற்கு பின்னாலும் தர்கரீதியாய் ஒரு நியாயமீரல் (நியாயமீரல் என்றாலே அது அநியாயம்தானே?)  இருக்கத்தான்செய்கிறது. ஆனால் மனம் அந்த அநியாயத்தை உணரவிடாமல்தடுக்க அதிகாரவர்கத்தின் கைக்கூலிகள் அவர்களுக்கு சாதகமான காரணிகளால் கட்டமைக்கப்பட்ட காரண‌த்தையே நம்பும்படி நம்மை கட்டாயப்படுத்துகிறார்கள்.

சென்றமுறை உள்ளாட்சித்தேர்தலில் சுயேச்சையாய் போட்டியிட்டு வென்ற ஒரு கவுன்சிலர் இந்தமுறை தோற்றுப்போகிறார், இத்தனைக்கும் அவர் கவுன்சிலராய் இருந்த காலத்தில்தான் பொதுக்கிணறு தூர்வாரப்பட்டு குடிநீர் அனைத்துபகுதிகளுக்கும் வினியோகிக்கப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் காலைக்கடன் கழிக்க வெட்டவெளிகளில் இருட்டோட ஒதுங்கவேண்டியிருந்தநிலையில் பகல்வேளை வயிற்றைப்பிசைந்தால் எங்கேபோவதென கையைப்பிசைந்துகொண்டிருக்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே கழிப்பிடமும், அதற்குத்தேவையான‌ தண்ணீர் வசதியும் அமைத்துகொடுத்ததும் அவர்தான். ஒரே நியாவிலைக்கடையில் அதிகப்படியான குடும்ப‌அட்டைகள் இருந்தபடியால் ஏற்ப்பட்ட கூட்டநெரிசலையும் அதனால் மக்கள்படும் அவதியையும் தவிர்க்கவேண்டி மேலிடங்களுக்கு கடிதங்கள் மூலமும் கையொப்பங்கள் மூலமும் உண்மையிலேயே போராடி 3 புதியகடைகளை திறக்கவைத்து சாதனைசெய்தார். ஆனால் அதையெல்லாம் மறந்த மக்கள் இந்தமுறை வேருஒருவரை கவுன்சிலராக்கிமகிழ்ந்தனர். காரணம் அவர் சுயேச்சையாய் வெற்றிபெற்றதை விரும்பாத அரசு( அவர் மட்டுமல்ல யார் சுயேச்சையாக வென்றாலும் எந்தகட்சிக்கும் பிடிக்காது. ஒன்று அவரை தன் கட்சிக்கு இழுக்கப்பார்க்கும் அல்லது அவரை அவர் வேலையை செய்யவிடாமல் தடுக்கும். இதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என எந்தபேதமும் இல்லை) அவருக்கு போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்பதுநிஜம். இதனால் கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச தொலைக்காட்சிபெட்டி ஆகியவை பெற்றுத்தருவதில் காலதாமதம் ஏற்ப்பட்டது, பெரும்பாலானவர்களுக்கு அது கிடைக்காமலேயேபோனது. அதற்குக்காரணம் அவரில்லை என்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருக்கவில்லை. நல்லவை பல செய்திருந்தாலும் இந்த ஒரு காரணம் மட்டுமே அடுத்தமுறை அவரை தோற்றுப்போகச்செய்தது எனபதுதான் உண்மை. நமக்கு டீவி கிடைக்கவில்லை என்ற ஒட்டுமொத்த சுயநல இரைச்சலில் நியாயத்தின் குரல் கேட்காமல் போய்விட்டது.  இதன் விளைவாய் நிகழக்கூடியது,

1 அந்த சுயேச்சை அரசியலிலிருந்து விலகலாம்,

2 அடுத்தமுறை ஏதாவது கட்சியின் சார்பில் மக்களுக்கு நேரடியாய் ஓட்டுக்கு 500ரோ 1000மோ கொடுத்து போட்டியில் செயித்து அனைத்து நலத்திட்டங்களுக்கான நிதியையும் தனக்கும் தன்சார்ந்தவர்களுக்கும் ஒதுக்கிவிட்டு நிம்மதியாய் இருக்கலாம்.

இது தேவையா?


நீங்கள் இதையும் விரும்பக்கூடும்