டீக்கடை விவாதம்



"இவங்களயெல்லாம் செறுப்பால அடிக்கனுங்கறேன் '

"ஏய் அப்படியெல்லாம் வாய்க்குவந்தாப்பல ஒளரக்கூடாது சொல்லிபுட்டேன். எங்காளு ஒரு முடிவெடுக்கருண்ணா அதுல ஆயிரம் சமாச்சாரம் இருக்கும் அதையெல்லாம் உங்கிட்ட சொல்லிகிட்டிருக்கதேவையில்லை தெரிதா?"

"என்னத்த பெரிய புளியங்கா சமாச்சாரம் கொத்துகொத்தா மக்க செத்திகிட்டிருந்தப்போ வாயையும் ........த்தையும் பொத்திகிட்டுகெடந்துட்டு இப்போ கூட்டம் நடத்றேன்னா கேக்கறவன கேனப்.........டைனு நெனைக்கிரார உங்காளு

"எங்காளாச்சும் ஆரம்பத்துலேந்தே குரல் கொடுத்துட்டேத்தான் இருக்காப்பல, உங்காளுக்குத்தான் இப்ப திடீர்னு அவங்கமேல பாசம் பொத்துகிட்டுவருது. வீனா வாயகொடுத்து .....த்த புண்ணாக்கிக்காத ஆமா."

இப்படி நேருக்குநேர் சரமாரியாய் அரசியல் பேசி(ஏசி)க்கொண்டிருந்தகாலம் ஒன்று இருந்ததது அதற்கான மேடைகளாய் அமைந்தவை டீக்கடைகளும், பார்பர்ஷாப்புக்களுமே. இங்கே அரசியல் பேசக்கூடாதுனு போர்டுகூட எழுதிவெச்சிருப்பாங்க ஆனாலும் அங்க அரசியல் உழளும் தவிர்க்கவேமுடியாது. அன்னிக்கி செய்தித்தாள்களும் வானொலியும் மட்டுமே செய்திகளை பரப்பிகிட்டிருந்ததால ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் இடையில நிறையகால அவகாசம் இருந்தது அந்த அவகாசம் நிறைய அனுமானங்களை கொடுத்தது அதனால் தொண்டர்கள் அதைப்பற்றி பேச விவாதிக்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால் தொண்டர்களின் அனுமானங்கள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கும். காரணம் அன்று கட்சியென்பது ஒரு கூட்டுக்குடும்பம். அதில் ஒரு தார்மீகம் இருந்தது. அந்த தார்மீக்த்தின் அடிப்படையில் முடிவுகளும், முழக்கங்களும் அமைந்தன. ஆகையினாலேயே அடிமட்ட தொண்டனும் தலைவனும் நெருக்கமானவர்களாய் இருந்தனர். எனவேதான் அவர்களுக்குள்ளான விவாதங்கள் வன்மமாயும், குரோதமாயும் மாறாமல் தற்கரீதியிலான கோபம்மட்டுமேயாய் இருந்தது.

இன்று பெரும்பாலான டீ கடைகளில் செய்தித்தாள்களே வாங்குவதில்லை. பெரும்பாலான செய்தித்தாள்களில் ( ஆரோக்கியமான )அரசியலே இல்லை. கட்சிகளுக்குள் நிலவும்(உலவும்) காழ்ப்பொணர்ச்சிகளாலும், குண்டர்படைகளாலும் இவ்வாறான விவாதங்கள், விமர்சனங்கள் வன்முறையில் முடிகின்றன. கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிகள் இருப்பதால் நியாமான சில கேள்விகளும், சந்தேகங்களும் பிற கோஷ்டியினரால் முளையிலேயே களையப்படுகிறது.

இந்நிலையில் தீவிர அரசியல் விமர்சனம் என்பது முகம்தெரியா யாரோசிலர் தங்கள் வலைப்பூவின் குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வதோடு முடிந்துவிடுகிறது. சமூக ஆர்வலர்கள் சிலர் தனியார் தொலைக்காட்சிகளில் தோன்றி (பெரும்பாலும் இத்தகைய நிகழ்ச்சிகளை முன்முடிவுகளோடே துவக்கி  அவர்கள் நினைத்த திசையிலேயே முடித்தும்விடுவார்கள் )  சில திவிரமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டாலும் நிகழ்ச்சியின் நேரமேளாண்மை காரணமாக அவை பாதியிலேயே தடுக்கப்பட்டு அடுத்தவருக்கு தாவிவிடுகிறது. டிவிட்டர் போன்ற இணையதள அரசியலோ கமலஹாசனின் காமடிவசனங்கள்போல் மேலோட்டமானவைகளாகவே இருக்கின்றன. இந்தசூழ்நிலையில் ஆரோக்கியமான அரசியல் விவாதம் என்பது...... ???????????????

Comments