என்னை நானாய்




குணங்கள் அற்று
இருப்பதனால்
கோமாளியெனும் பட்டம்.

தேவைக்கு அதிகமாய்
தேவையில்லை என்ற‌தற்காய்
தேடிப்பிடித்துத்தந்தார்கள்
கையாலாகாதவன்
எனும் கௌரவம்.

சுவைகள் அற்றவனாய்
திரிந்தவனுக்கு
சூட்டிமகிழ்ந்தார்கள்
ஜடம் எனும் அடைமொழி.

சின்னங்கள் இல்லாமல்
அலைவதனால்
நாத்திகனாம்.

அமைதிவேண்டி
மௌனம்காத்தால்
அசமந்தமாம்.

காயங்கள் தவிர்க்க‌
ரகசியம் காத்தால்
அழுத்தக்காரனாம்.

சத்தியம் நீ
அடித்துச்சொல்லும்
கற்பூரத்தில் இல்லை -
எங்கும் நிரைந்திருக்கும்
நித்தியத்தில் இருக்கிறதென்றால்
பொய்யனாம்.

வண்மம் தவிர்க்க‌
விலகிச்சென்றால்
பேடியாம்.

இப்படியாயும்
இன்னும் பலவாய்யும்
அறியப்படும் என்னை
நானாய் அறியநேர்வது
என்றோ?




Comments