கல்யாண மாலையும் கம்மினாட்டி( community ) மீட்டிங்கும்

தமிழகத்தில் ஜாதி வெறிக்கு பலியான அப்பாவிகளின் ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் என்றாவது ஒருநாள் ஜாதி முற்றிலுமாய் ஒழிந்து தன் சந்ததியினராவது ஜாதித்தறாரால் கொல்லப்படாமல் நிம்மதியாய் வாழ்வார்கள் என்ற கனவோடு!!! உலவிக்கொண்டிருக்க‌ இல்லை இல்லை அது ஒரு பகல்கனவுதான் என சம்மட்டியால் ஓங்கியடித்து சத்தியம் செய்வதைப்போல் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது அரசு.

ஜாதி ஒழியவேண்டும் ஜாதி ஒழியவேண்டும் என்று வாய்கிழிய பேசினாலும் ஒவ்வொரு ஜாதி மக்களும் அதன் தலைவர்களும் ஜாதியை அழிந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டிருக்கிண்றனர். உயர்ஜாதிகளாய் கருதப்படும் ஜாதி மக்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வதற்காக அரசின் ஜாதி வாரி கணக்கெடுப்பில் அவர்கள் ஜாதிக்குள்ளேயே உலவும் உட்பிரிவுகளை தங்களோடு இணைக்கக்கூடாது அல்லது இணைக்கவேண்டும் என பல க்ருத்தாக்கங்களை உருவாக்கிவருகிறனர். தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்படும் ஜாதிகள் தங்களுக்குள் நிலவும் உட்பிரிவுகளை தனித்தனி அடையாளங்களோடு ஒப்பிட்டு அவற்றை தனி கரிசன‌த்தோடு அனுகவேண்டும் என்று கோரிகை வைக்கின்றனர்.    உள்ளபடியே ஜாதி வேண்டுமா?  வேண்டாமா? எனும் விவாதங்கள் ஏற‌த்தாழ எல்லா தனியார் தொலைக்காட்சிகளிலும் காணக்கிடைக்கின்றன.ஜாதிகளற்ற சமூகம் வளரவேண்டி ஒருபுரம் கலப்புத்திருமண‌த்தை ஆதரித்தும், அதிகரிக்கச் செய்யவேண்டியும் அத்தம்பதியினருக்கு அரசு ஊக்கத்தொகையும் அளித்துவரும் அதேவேளையில் சமீபகாலங்களில் ஜாதிவாரியான திருமண தகவல் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன‌.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண தகவல் மையமாக செயல்ப்ட்டுக்கொண்டிருக்கும் கல்யாணமாலை ஜாதிவளர்ப்பு மையங்களின் தலையிடமாய் உருவெடுத்துள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. வருகிற 16-05-2012 அன்றும் குறிப்பிட்ட சில ஜாதிகளின் வரண்களுக்கான ஒருங்கமைவை நடத்தவுள்ளது. இதன்மூலம் ஜாதி வளருமோ? ஒழியுமோ? தெரியாது ஆனால் ஒருங்கிணைப்பாள‌ர்களின் கல்லா நிறையும் என்பதில் சந்தேகமில்லை.

ஜாதி ஒரு பணம்காய்க்கும் விருட்சம். அதை வேரொடு அழிக்க யாருக்குத்தான் மனம்வரும்?

Comments

  1. சமீபத்தில் படித்த செய்தி.

    மணமகன் குடிப்பவராக இருக்கலாமா? வேண்டாமா?

    டிக் செய்யச் சொன்னால் பரவாயில்லை ஆனால் வசதியான மணமகனாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கொள்கையாக இருக்கிறதாம்.

    சாதிக்கு அப்பாற்பட்ட பணம் மேலே வந்து கொண்டுருக்கிறது.

    ReplyDelete
  2. பணம் சாதியை ஒழிக்குமானால் நலம்.

    ReplyDelete

Post a Comment