காணி நிலம் வேண்டும்
குறைந்தது
கால் கிரவுண்டாவது வேண்டும்.
கார்ணர் பீஸாய் வேண்டும்,
அப்ரூவரோடு, பட்டா, சிட்டா
அடங்கலும் வேண்டும் -
அக்கம் பக்கம் சுற்றிலும்
ஆள்நடமாட்டம் வேண்டும்.
ஆபீஸிற்கு பக்கத்திலே வேண்டும்,
என் பட்ஜெட்டிற்குள்ளேயும் வேண்டும்.
மண் வளம் வேண்டும்,
மரங்கள் அடர்ந்த சாலையும் வேண்டும்,
இணக்கமான உறவுடன்
எதிர் வீடு வேண்டும்,
நடைபயிலும் தூரத்தில்
நல்ல பள்ளியும் வேண்டும்.
எக்காலத்திலும் தடைபடாத
குடிநீர் வேண்டும்.
கண்சிமிட்டாமல் எரியும்
தெரு விளக்கு வேண்டும்.
இறவில் உலவும் கூர்க்கா வேண்டும்,
பின் இரவில் வரநேர்ந்தால்
குறைக்காத தெருநாயும் வேண்டும்.
இவையாவும் கிடைகாதவரை
நானும் பா(ர)தியே!
ஆஹா கேளம்பிடாண்டா... பாரதி இது உனக்கு தேவையா? தேவையா? இனிமே எழுதுவ...
ReplyDeleteஅவுரு பாரதி.. இவரு பாதியா ? வாழ்க கவிஞர் பாதி அவர்களே
உங்களைப் பற்றிய எந்த விபரமும் இல்லையே? அசர அடிக்கிறீங்க?
ReplyDeleteநன்றி ஜொதிஜி! சொல்லிக்கற அளவு ஒன்னுமில்லை Industrial Photographer கூடவே கல்யாணம் காதுகுத்து எல்லாமும் எடுப்பேன் சென்னை அம்பத்தூரில் STUDIO இருக்கு.
ReplyDelete