"தருமம் தலைகாக்கும்"னு சொன்னா
"அப்போ ஹெல்மெட் போடமலேயே போலாமா"ங்கறான் ஒருத்தன்.
'எவன்கிட்ட மாட்டறயோ அவனுக்கு 50 ரூ தர்மம் பண்ணிட்டா(பிச்சை) தாராளமா போலாங்கறான்' இன்னொருத்தன்.
வீடுகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பழைய துணிமணிகளை இப்படித்தான் அனாதை இல்லங்களுக்கு தள்ளிவிடுவதும், சுபநிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமாய்போகும் சாப்பாட்டை சிறுவர் இல்லங்களுக்கு கொடுத்துவிடுவதும், அய்யா தருமம்பன்னுங்க சாமின்னு கேக்கறவங்க முகத்தைக்கூட பார்க்காமல் அல்லது பார்க்கபிடிக்காமல் 1 ரூபாயோ 2 ரூபாயோ போட்ட்டுட்டு போவதுமே தருமம்ன்னு நம்பிகிட்டிருக்கோம். உண்மையில் தருமம் பிறர்கேட்டு கொடுப்பது அல்ல. காலம் அறிந்து சமயமறிந்து நாமாகவே தரக்கூடியது. தரக்கூடியதுங்கறதுகூட ஏதோ ஒருவித உயர்நிலையை காட்டுகிறது எனவே அந்த வார்தைகூட வேண்டாம் செய்யக்கூடியது (உதவி) என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும். அப்படி செய்யற உதவியை மனநிறைவோட செய்யனும். எந்த விஷயத்திலும் மனநிறைவு வரனும்னா அதை நாம் விரும்பி செய்யனும், இதைதான் அறம் செய்ய விரும்பு சொன்னாங்க ஒளவையார்.
அறம் செய்ய விரும்புன்னு சொன்ன அதே தமிழ் கூறும் நல்லுலகம்தான் (அதே ஒளவையார் தான்னு சொல்லி இருப்பேன் ஆனா அவ்வையார்ங்கறது ஒருத்தர் இலலை வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த புலவர்கள்னு சொல்றாங்க நமக்கெதுக்கு வம்பு)ஏற்பது இகழ்ச்சின்னும் சொல்லியிருக்கு. ஏற்பது இகழ்ச்சிங்கற வரி பிறர்கிட்ட தானமோ உதவியோ கேட்கும் நிலையில் இருப்பவர்களிடம் அப்படியெல்லாம் கேட்கக்கூடாது அது ஒரு மானக்கேடான விஷயம் அதனால யாரும் கையேந்தி நிக்ககூடாதுனு சொல்ற அட்வைஸ்போல தெரிந்தாலும் உன்மையில் ஒளவை இந்த வரிகளை கையேந்தி நிற்பவர்களிடம் சொல்லியிருக்கமாட்டார் என்றுதான் எனக்கு தோனுது. ஏன்னா பிச்சை எடுப்பவனிடம் பிச்சை எடுப்பது அசிங்கம் அவமானம்ன்னு சொல்வதால் எந்த புண்ணியமும் இருக்கப்போவதில்லை.(நானும் பிச்சைங்கற லெவல்லயே பேசுவதாக நினைக்கவேண்டாம் ஒரு புரிதலுக்காகவேண்டிதான்). ஆக ஒளவையார் தேசாந்திரியாக சுற்றிக்கொண்டிருக்கையில் பார்க்க நேர்ந்த வறுமையை மக்களின் மீளமுடியாத்துயரை கண்டு மக்களின் இந்நிலைக்கு மக்கள்மேல் அக்கறையில்லாத அரசனும் சுயநலமிக்க செல்வந்தர்களும்தான் காரணம் என அறிந்து தான் சந்திக்கும் அரசர்களிடமும், செல்வந்தர்களிடமும் 'ஏம்பா உன் ஆட்சியில இத்தினிபேரு இத்தினி அவஸ்த்தைப்படராங்க இது உனுக்கு அசிங்கமா இல்லையா? அவங்க இந்த நிலமையில இருப்பதற்கு உன் ஆட்சிதானே காரணம் இது உனக்கு அவமானமா இல்லையா? அதால தருமம் பண்ண பழகிக்கோ அவங்க ஏற்பது உனக்கு இகழ்ச்சின்னு செவுட்டுல அறையராமாதிரி சொல்லியிருக்காங்கன்னு எனக்கு தோனுது. உங்களுக்கு எப்படி?
நான் பலமுறை மனதில் நினைத்திருப்பதை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக சோழ பரம்பரையைப் பற்றி ஆராய்ந்து கொண்டுருக்கேன்.
ReplyDeleteஉங்கள் ஆராய்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDelete