100 வது டெலிவரி.

பிளாக் எழுத தொடங்கி கிட்டத்தட்ட 3 வருஷம் ஆகிறது. இதுவரை 99 பதிவுகள் எழுதியாச்சு இது 100வது.

என் முதல் பதிவை  சாயம் போன கறுப்புச்சட்டை இதுவரை 9 பேர் வாசித்திருக்கிறார்கள் இதிலிருந்தே தேரியும் என் பிளாக் எழுதும் லட்சணம். 

மட்டைன்னு ஒன்னை கையில் எடுத்து ஆட ஆரம்பிச்சபிறகு சதம் அடிப்பது ஒரு மகிழ்ச்சிதானே.( அது எந்த கிரவுண்டா இருந்தாயென்ன, எந்த பிளேயர்ஸ்கூட இருந்தாத்தான் என்ன) 

இங்கே எழுத ஆரம்பித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம் திருப்பூர் ஜோதிஜியின் நட்பும் அன்பும். என் எழுத்துக்கள் மேல்  அவருக்கு பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும் (அவரை ஈர்ப்பதுமாதிரியாய் எழுதமுடியாது) தனிப்பட்ட முறையில் என் நலம்விரும்பி என்பதில் ஐயமில்லை. 

என்னையும் ஒரு 24 பேர் பின்தொடர்கிறார்கள் அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. ( இன்னுமா என்னை நம்புறீங்க?)

மற்றபடி இநத 99 பதிவுகளுக்கும் காரணம் நண்பன் சுரேஷ் துரைராஜன்  இவன்தான் உனக்கு தோன்றுவதையெல்லாம் எழுது நாளாக நாளாக எழுத்து கைகூடும் அப்படி கைகூடாவிட்டாலும் பரவாயில்லை என்று என்னை உந்திக்கொண்டிருப்பவன். 

மற்றபடி இனியாவது படிக்கிறாமாதிரி எழுத கற்றுக்கொள்ளவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். 

நன்றி.


Comments

 1. 100-க்கு வாழ்த்துக்கள்...

  25 !

  ReplyDelete
  Replies
  1. 24 ல் ஏற்கனவே இருக்கிறீர்கள். நன்றி

   Delete
 2. 100 பதிவுகள் என்பது சாமான்ய விஷயமில்லை
  இது மேலும் ஆயிரமாய்த் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 3. என்னுடைய தளத்தில் தொடக்கம் முதல் விமர்சனம் மூலம் பலரையும் கவனித்தவன் என்ற முறையில் உங்களின் வீச்சறிவாள் விமர்சனத்தின் முதல் ரசிகன் நான். அந்த விமர்சனம் கொடுத்த தாக்கம் தான் உங்களுடன் தனிப்பட்ட முறையில் உறவாட வைத்தது. எழுதுவதை விட நறுக்குத் தெறித்தாற் போல குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் விமர்சிப்பதும் அந்த விமர்சனம் பலரையும் கவர்வதும் மிகச் சவலான காரியம். அதில் உங்களின் திறமையை நான் அறிந்ததே.

  இங்கே பலருக்கும் உண்டான ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் விசயங்களுக்கும் பலரின் விமர்சனம் கிடைக்காத போது மனம் சோர்வடைந்து எழுதுவதை நிறுத்தி விடுகின்றார்கள். இது நான் ஆச்சரியப்படும் சமாச்சாரம். தன்னளவில் தோன்றும் விசயங்களை எழுதக் கிடைத்த வாய்ப்பு என்று கருதாமல் உடனடி எதிர்பார்ப்புகளை எல்லோரும் சுமந்து கொண்டே எழுதுவதால் பலருக்கும் பலவிதமான திறமைகள் இருந்தும் சோர்வடைந்து ஜொலிக்காமல் போய்விடுகின்றார்கள்.

  கருப்புச்சட்டை பதிவை இன்று தான் பார்த்தேன் படித்தேன். இதை விட பெரிய திறமை வேறு எவரும் சொல்லத் தேவையில்லை. என்னதான் ஊக்குவிப்பு இருந்தாலும் எழுத்து என்பது நேரம் அமையவில்லை அதனால் நான் எழுத முடிவதில்லை என்ற காரணத்தை காட்டிலும் நமக்கு அதில் அதிக ஆர்வம் இல்லை என்பதாகத்தான் நான் எடுத்துக் கொள்வதுண்டு.

  காரணம் பலன் எதிர்பார்க்கும் சமூக சூழ்நிலையில் வாழ்ந்து பழகிவிட்ட இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தம் என்பது எழுத்து மூலம் நாம் இறக்கி வைக்க அதிக வாய்ப்புகளை இந்த வலைதளங்கள் உருவாக்கிக் கொடுத்த போதிலும் நாம் அனைவரும் அன்றாடம் தோன்றும் அழுத்தங்களை உள்ளேயே வைத்துக் கொண்டு படிமமாகத்தான் வைத்துக் கொண்டு மறுகவே விரும்புகின்றோம்.

  வேறென்ன சொல்ல. வாழ்த்துகள் என்று எழுதுவதை விட வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும். குறிப்பாக தாங்கள் உள்ள புகைப்பட துறையில் சந்திந்த நபர்கள், சவாலான தருணங்கள், புகைப்படக்கலை குறித்த உங்கள் பார்வை, சமூக மாறுதல்கள் போன்றவற்றை வாரந்தோறும் எழுதுமாறு இந்த சமயத்தில் கோரிக்கையாக வைக்கின்றேன்.

  உழைக்கும் போது நிச்சயம் பலன் கிடைத்து பணமும் கிடைக்கும். ஆனால் பல சமயம் எந்த பாதை வழியே நாம் வந்தோம் என்பதை அறிய நாம் எழுதிய எழுத்துக்கள் தான் உணர வைக்கும்.

  அந்த உணர்வை தர வேண்டுகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் ஜோதிஜி - அலசி ஆராய்ந்து - விளக்கமாக எழுதி - கோரிக்கையும் ( ஆலோசனை என்றும் கூறலாம் ) வைத்து உணர்வைத் தர வேண்டுகோளும் வைத்து நீண்டதொரு மறுமொழி இட்டிரூபது பாராட்டுக்குரியது - நல்வாழ்த்துகள் ஜோதிஜி - நட்ப்யுடன் சீனா

   Delete
  2. ஐயா சீனா அவர்களுக்கு நன்றிகள். நகரின் அடயாளம் குறித்து ஒரு ஆதங்கமாய் எடுத்துவைத்த கருத்திற்கு பழயன கழிதலும் பழமொழிழை எடுத்துக்க்காட்டி ஏற்றுக்கொள்வதுமட்டுமே நம்மால் ஆனது என தெளிவுபடுத்தியிருப்பது மகிழ்ச்சி.

   தொடர்ந்து எழுதாமல் இருப்பதற்கு ஜோதிஜி சொல்வதும் முக்கிய காரணம்தான். தங்களின் ஆலோசனையை கூடுமானவரை செயல்படுத்த முயற்சிக்கிறேன்.நன்றி.

   Delete
  3. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது போன்றது தான் நமது பதிவுலக பயணமும்.. விரிவாக சொன்ன ஜோதிஜிக்கு பாராட்டுக்கள்

   Delete
 4. இனிய பாராட்டுகள்! ஆயிரமாக வளரட்டும்!

  ReplyDelete
 5. தொடர்ந்து உற்சாகமாக எழுத வாழ்த்துக்கள் அகிலன்

  ReplyDelete

Post a Comment