கட்டாமலே வெச்சுகலாம்!


1. முதலீடு என்று நினைத்துகொண்டு சென்னையிலிருந்து வெறும் 1.30 மணிநேரத்தில் நல்ல காற்றோட்டம், சுவையான தண்ணீர், மனைப்பிரிவிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 4 கிமி, ரயில்நிலையம் 5 கிமி, அரக்கோனத்திலிருந்து 24 மணிநேர ஷேர் ஆட்டோ வசதி என எங்கோ ஒரு பொட்டல்வெளியில் மொட்டை வெயிலில் திரிந்து திரிந்து அளப்பரப்பிக்கொண்டிருக்கும் ஏதோஒரு TV தொகுப்பாளினியின் புடவை டிசைன், ரவிக்கை கலர் என பெண்களும், இங்கே சொல்லமுடியாத எதையோ பார்த்து வழிந்துகொண்டே ஆண்களும் கண் இமைக்காமல் கவனித்து பின் உற்றார், சுற்றார் என பலபேரின் சொரிந்துவிடலுக்கு உங்கள் கையை புண்னாக்கிக்கொண்டு ( அதாங்க லோன் ) இப்போதைக்கு வீடோ வாசலோ கட்டவேமுடியாத ஒரு வனாந்திரத்துல வாங்கிப்போட்ட 1/2 கிரவுண்ட் நிலத்தில நீங்க முள்வாலியோ, மதில்சொவரோ கட்டாமலே வெச்சுக்கலாம். யாரும் ஏன்னு கேக்கமாட்டாங்க.

2.  வாழ்க்கை எப்பவுமே யாருக்குமே நிரந்தரம்ன்னு சோல்லிடமுடியாது. எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம். இமயமலையின் 32 சிகரங்களை கடந்துசென்ற ஒருவர் ( பிரிகேடியர் பல்வான் சந்து ) கார்மோதி இறந்துவிடுகிறார். மலைய புடுங்கன‌ பைல்வான் புல்தடுக்கி விழுந்தானான்னு நம்ம ஊருங்கள்ல சொல்ரதுதானே? அதேபோலதான் யாருக்கும், எப்பவும், என்னவும் நடக்கும் அதுக்கு நம தயாரா இருக்கனும். நாளைக்கே உங்களுக்கு ஒன்னுன்னா குடும்பத்தை யாரு பாதுப்பாங்க, குழந்தைகள் படிப்பு என்னாவது இன்னிக்கு நிலைமையில படிப்புத்தான் நம்மால கொடுக்கக்கூடிய ஒரே சொத்து அதுவும் இல்லாம போயிட்டா அதுங்க எதிர்காலம் என்னவாவது. இப்படி ஒவ்வொருத்தரும் ஒன்ன ஒன்ன சொல்லி நம்மல பயமுடுத்தி, எதிர்காலத்தைப்பத்தி வெட்டவெளியில, மொட்டமாடியில நட்டநடு மதியானத்துல யோசிக்கவெச்சி இதுக்கு என்னதான் வழின்னு நாம பலபேரகேட்டு அலசி ஆராஞ்சி கடைசியா ஒரு இன்சூரண்ஸ் பாலிசி போடுவோம்மு ஒருமனதா முடிவெடுத்து ஏஜன்டை கூப்பிட்டு பேசினா அய்யோ அவரு வேர பயங்கரமா கொழப்பி ஒருவழியா மாதம் 1000 ரூபாய் எப்படியாச்சும் கட்டிடனும் வேரவழியே இல்லை, இல்லன்னா கார்மோதிடும், இதயநோய் வந்துடும் நாம செத்துடுவோம் நம்ம குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும் இப்படியெல்லாம் பயந்துபோய் கட்ட ஆரம்பிச்ச பாலிசியை பல்லகடிச்சிகிட்டு ஒரு ஆறுமாசம் கட்டிட்டு அப்பறம் ஏதேதோகாரணங்களால ஒரு மாசமோ ரெண்டுமாசமோ கட்டமுடியாமபோய் அப்புறம் சீ போ என்ன பெரிய வாழ்க்கை மரத்தவெச்சவன் தண்ணிய ஊத்தப்போறான் அதுக்கு ஏன் நாம தலையால தண்ணியகுடிக்கனும்ன்னு ஒரு சுபயோக சுபதினத்தில் இனி பணம் கட்டுவதில்லைன்னு முடிவுபண்ணப்பறம் பணத்தை கட்டாமலே வெச்சுக்கலாம். மாசாமாசம் 1000 ரூவா மிச்சம்.


3.  எந்தஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன் கடவுள் மேல்பாரத்தை போட்டு ஆரம்பி எல்லாம் நல்லபடியா நடக்கும்னு சொல்றவங்களும், எந்தகாரியமா இருந்தாலும் அதப்பத்தின எல்லா விஷயத்தையும் தெளிவா தெரிஞ்சுகிட்டு முழு ஈடுபாடோட தொடங்கினா அந்த காரியம் நிச்சியம் வெற்றிதான் இதுல கடவுளுக்கு வேலையே இல்லைன்னு சொல்றவப்க்களும் இருப்பாங்க. சாய்பா ரொம்ப சக்திவாய்ந்தவர், வாராவாரம் வியழக்கிழமை தவறாமல் எந்த வேலை இருந்தலும் சாய்பாபா கோயிலுக்கு போய்டுவேண் இப்படி சொல்றவங்களும்,சாமி என்ன வியாழக்கிழமைதான் வரனும்னு சொல்லிச்சா?நமக்கு எப்போ தோனுதோ அப்போ கும்பிட்டுக்கவேண்டிய‌துதான். எனக்கெல்லாம் கூட்டத்தை பார்த்தாலே கோவமா வருது எனச்சொல்பவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

உங்க பக்கத்து வீட்டுக்காரர், உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்ககூடியவரும்கூடன்னு வெச்சுக்கங்களேன் அவரு தன் குடும்பத்தோட திருப்பதிக்கோ, பழனிக்கோ போய்ட்டு வந்திட்டு ஒரு சின்ன தட்டுல கொஞ்சம் விபூதி குங்குமம், கற்கண்டு, பஞ்சாமிருதம், கருப்பு கயிறு இப்படி ஏதேதோ பிரசாதம்னு கொடுக்கராங்க மேல சொன்ன இரண்டு டைப்புல நீங்க முதல் டைப்பா இருந்தா பயபக்தியோட விபூதி குங்குமத்தை நெத்தில வெச்சுகிட்டு பஞ்சாமிருதத்தை வழிச்சு நக்கீட்டு அந்த கருப்பு கயிறை கையிலயோ, இடுப்புலயோ எங்க வேண்னா கட்டிக்கலாம். இதே நீங்க ரெண்டாவது டைப் ஆளா இருந்தா மேல சொன்னதுல எல்லாத்தையும் செய்திட்டு அந்த கயிறை மட்டும் கட்டாமலே வெச்சிக்கலாம் பக்கத்துவீட்டுக்காரர் ஏன்னு கேக்கமாட்டார்.


இப்படி இன்னும் என்னவெல்லாமோ கடாமலே வெச்சுக்கலாம். ஆனா அமர் பிரகாஷ்ல பிளாட்டை வாங்கிட்டு பணத்தை கடாம வெச்சிகிட்ட‌ பிளாட்டை காலிபண்ன சொல்லிடுவாங்க. ( அதவது கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளிடுவாங்க )



Comments

  1. அட இன்னாங்னா நீங்க... மூணு பாயிண்ட் சொன்னீங்க, முக்கியமான போயண்ட விட்டு போடீ ங்க...
    அது வந்து, நான்கூட கட்டாமலே வச்சிக்கலாம்னு ரொம்ப நாளா ட்ரை பண்றேன் என் பொண்டாட்டி வுட மாட்டேன்குரா...

    முக்கியமான பாயிண்டு அதானுங்க சொன்னேன் அடுத்த தடவ மறக்காம போட்டுடுங்க...

    ReplyDelete
  2. இன்னும் என்னவெல்லாமோ கடாமலே வெச்சுக்கலாம்ன்னு ஹிண்டு கொடுத்திறுக்கோமுல்ல அத கவனிக்கலையா. முல்ல‌முத பாய்ண்ட்டே அதான் ஆனா நம்மல நாமலே காட்டிக்ககூடாதுன்னுதான் அதை மறைச்சுட்டேன் இப்ப நீ மாட்டன இல்ல.. மாட்டன இல்ல..

    ReplyDelete
  3. <a href="http://https://www.youtube.com/watch?v=FcKUnEnm5TU&t=29s"

    ReplyDelete

Post a Comment