67% ஆதிக்கம்

காதுகள் கிடைப்பதில்லை
கருத்துக்களுக்கு,
வேண்டியதெல்லாம்
அச்சம்,மடம்,நாணம் மட்டுமே,
நிமிர்ந்த நடையும்,
நேர்கொண்ட பார்வையும்
சாய்துவிடுகின்றன
பின்னாலிருந்து.
மேலழகிற்கும்
தோலழகிற்கும்
திற‌க்கின்ற வாசல்களில்
இரைந்து கிடக்கின்றன‌
குதற‌க்காத்திருக்கும்
ஆ(ண்)திக்க வா(நா)ய்கள்.

Comments

  1. சாய்துவிடுகின்றன
    பின்னாலிருந்து.//
    சாய்த்துவிடும் பாரதியின் புதுமைப் பெண்னின் வீரம்.

    ReplyDelete

Post a Comment