பொருள் தேடும் நெடும்பாதையில்
உடன் பயணிக்கும் நீ
மயிரிழை முன்செல்வதாலேயே
என்னை முந்திவிட்டதாய்
மார்தட்டிக்கொள்கிறாய்.
இடைவெளியின் அளவு
இரண்டங்குலம் பெருகியதும்
உன்னை பின்தொடர்வதாய்
புகார் செய்கிறாய்.
வெற்றிக்கனி ஒன்றை
எட்டிப்பறித்ததும்
முன்னேறிவிட்டதாய்முகம் பூரிக்கிறாய்.
வேகவேகமாய் வேட்டையாடி
வீழ்ந்தவைகளை
சுமந்துசெல்கையில் - வெறுமைகளால்
நிரைந்துகிடக்கப்போகிறது உன்பாதை.
கட்டிச்சென்றவைகளை
கடைவிரித்துக்காட்டவும்,
காதுகொடுத்து கேட்கவும்
நாதியிலா ஓர் பொழுதை வேண்டித்தான்
உன் இப்போதைய புகாரும்,பூரிப்புமெனில்
ஆட்சேபனை ஏதுமில்லை
போய்வா.
வெற்றிக்கனி ஒன்றை
ReplyDeleteஎட்டிப்பறித்ததும்
முன்னேறிவிட்டதாய்
முகம் பூரிக்கிறாய்.
வெற்றிக்கனி பறிக்க வாழ்த்துக்கள்.
kani parikka vazuthullkal endaral kani ennum parikkalvilya pooi va enbadan arthame nannum kani parithuvitten enbathalthan sagothri
ReplyDelete