சர்வாதிகாரி

தேசப்பற்றை பாடமாய் நடத்தியும்
மதப்பெரும்பான்மை உணர்வூட்டியும்
ஜனநாயகப் பா(போ)ர்வையில்
குறைந்தபட்ச மக்கள் ஆதரவில்
தேர்வாகிவிடமுடியும்
ஓர் பிரதமர் .


தன் நிலத்தின்மீது பற்றும்
இனத்தின்மீது அக்கறையும்
மக்கள் பேராதரவும் இல்லாமல்
தோன்றிவிடமுடியாது
ஓர் சர்வாதிகாரி .

Comments