மேலும் –
கீழுமாய்
முட்டிக்கொண்டும்
ஒட்டிக்கொண்டும்
மாறி மாறி
சுழல்வதற்கு
சலித்துகொண்டதேயில்லை
அவை!
பார்த்துக்கொண்டிருப்பதற்கு
நானும்தான்.
மிகு உற்சாகத்தில்
ஒன்றை ஒன்று
விரட்டிக்கொள்கையிலும்
திடீரென செங்குத்தாய்
கிழிறங்கி,
சட்டென
தலைதூக்கி மேலேழுவதுமாய்
சாகசம்
காட்டுகையிலும்
சிரித்துக்கொள்வேன்.
எனை
புரட்டிப்போட்டு பலம்காட்டி
தன் இனையைக்கவரும்
சில,
சிலிர்த்துக்கொள்ளும்
உள்ளுக்குள்.
மீன்களின்
ஸ்பரிசம்வார்த்தையில் புரியாது.
நேற்றுவரை
இங்கேதான் இருந்தன.
இன்று....
- - - - - -
- - - - - - - - - - - - -
- - -
- - - - - - - - -
- - - -
(கோடிட்ட
இடங்களை நீங்களே
நிரப்பிக்கொள்ளுங்கள்.)
NICE
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=r0qsZBNxAg8