காத்திருக்கும் கேள்விகள்.

எதிர் எதிராய் அமர்ந்திருக்கிறோம்
ஏராளமான கேள்விகளோடு,

அலட்டலான பதில்களின்
அபத்தங்கள்
கேட்டவைகளையும்
கேட்கப்படவேண்டிடவைகளையும்
கிடப்பிலேயே கிடத்திவிடுகின்றன.

தவறான பதில்களாய்
நிகழ்ந்துவிட்டவைகளுக்கு
காரணமான கேள்வியை
தேடிக்கொண்டிருக்கிறோம்.

சரியான கேள்வியாய்
கருதப்பட்டவைகளுக்கு
காரணப்பின்னல்களில்
பதில்களை
மறைத்துக்கொண்டிருக்கிறோம்.

விருப்பமான பதில்கள்
மட்டுமேவேண்டி
கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் - நாம்
விரும்பத்தகாத பதில்களுக்கான
கேள்விகளை
தவிர்த்துக்கொண்டிருக்கிறோம்.

சில பதில்களின்
சுயரூபம் நம்மையே
விழுங்கிவிடக்கூடும் என்பதால்
பல கேள்விகளை  தள்ளிநின்று
பார்த்துக்கொண்டிருப்பதிலேயே
காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.


Comments

  1. /// விருப்பமான பதில்கள்
    மட்டுமேவேண்டி
    கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் - நாம்
    விரும்பத்தகாத பதில்களுக்கான
    கேள்விகளை
    தவிர்த்துக்கொண்டிருக்கிறோம்.///

    சுயநலம்...

    ReplyDelete
  2. /// பல கேள்விகளை தள்ளிநின்று
    பார்த்துக்கொண்டிருப்பதிலேயே... ///

    அறியாமை...

    ReplyDelete
  3. யோசிக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  4. நன்று. விடை சொல்ல முடியாத கேள்விகளுக்கு எதிர் கேள்விகளை எழுப்பித்தான் சமாளிக்க வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
  5. அன்பின் அகலிகன் - அருமையான கவிதை

    அலட்டலான பதில்களின் அபத்தங்கள் - தவறான பதில்கள் - மறைக்கிற பதில்கள் - விரும்பத் தகாத பதில்கள் - இத்தனையும் கேள்விகளின் தன்மையினையே - கேட்கும் நோக்கத்தினையே மாற்றி விடுகின்றன.

    சிந்தனை நன்று - பதிவு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment