ரங்கநாதன் தெரு - தி நகர்
எல்லார் கை (பை) யிலும் வாழ்க்கைத்தரம்!
காட்சி ஊடகம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய விண்வெளிக்கழகத்தின் பிரதிநிதியாய் வந்திருந்த ஒரு சிறப்பு விருந்தினரிடம்
நிகழ்ச்சி தொகுப்பாளர் : உலகிலேயே முதன் முதலாய் நிலவில் கால்வைத்ததாய் அல்டாப்புகாட்டும் ஆனானப்பட்ட அப்பாடக்கர் அமெரிக்காவே அதுக்கு பிறகு இதுவரை நிலாவுக்கு ஆள் அனுப்பக்கானும், அப்படி இருக்க எந்த அடிப்படையில் நீங்கள் இன்னும் மூன்று மாதசத்துல நிலாவுல மக்களை குடியேற்றப்போகிறோம்ன்னு சொல்றீங்க?
விருந்தினர் : இதபாருங்க சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க அதை எல்லாம் கேட்டுகிட்டிருந்தா நாம் எதையுமே செய்யமுடியாது. சுதந்திர இந்திய வரலாற்றில் நாங்கள் மட்டும்தான் இத்தனை ஆண்டுகளாக விண்வெளி ஆராய்சியை செய்துகிட்டுவருகிறோம். அதால நீங்க நம்பித்தான் ஆகனும். எப்படி ஆள் அனுப்புவாங்க அதுக்கு என்ன அடிப்படைன்னு எல்லாம் கேக்றாங்களே அவங்கள வந்து ஆராய்ச்சி பண்ண சொல்லுங்களேன் பாக்கலாம். விண்வெளி ஆராய்ச்சின்னு ஒன்னு இருக்குன்னே தெரியாத நாடுகள்கூட நாங்களும் நிலவுல இடம் வாங்கிட்டோம்னு பீத்திக்கும்போது நாம ஏன கூடாது?
நிகழ்ச்சி தொகுப்பாளர் : நிலவில் காற்று நீர் என மனிதன் வாழ்வதற்கான எத்தகைய இயற்கை ஆதாரமும், சூழ்நிலையும் இல்லை என்று கூறுகிறார்களே அபடியான நிலையில் எப்படி மனிதன் அங்கு வாழமுடியும்
என்று நினைக்கிறீர்கள்?
விருந்தினர் : நிலவுல காத்து இல்லை தண்ணி இல்லை என சொல்றதெல்லாம் சும்மா. நம் முன்னோர்கள் வான சாஸ்த்திரத்தில் உலக நாடுகளை விட மிக மிக முன்னோடிகள் அதனால்தான் அதோபாரு நிலால ஆயா வடைசுடுதுன்னு தன் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது சொல்லிகொடுத்திருக்காங்க. காத்து இல்லாமல் ஆயா அங்க இருந்திருக்க முடியுமா? இல்ல தண்ணி இல்லாமதான் மாவரைச்சு வடை சுட முடியுமா?
ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர் இப்படி பேசினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ இன்றைய புதியதலைமுறை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அரசியல்வாதி திரு கோபண்ணா பேசியது அதைவிட அபத்தமாக இருந்தது.
மன்மோகன் சிங்கும், பா. சிதம்பரமும் பொருளாதாரபுலிகள் என்பதாலேயே அவர்களை நம்பித்தான் ஆகவேண்டும் என்பதுபோல் பேசுகிறார். ஒன்பது ஆண்டுகளில் 8. சில்லரை சதவிகித வளர்ச்சி இதுவரை இந்தியா காணாதது என சொல்லிச் சொல்லி புளங்காகிதம் அடைகிறார்.
எல்லாமே புள்ளி விவரங்களாக காகிதத்தில்தானே உள்ளது மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையே எனக்கேட்டால் மக்களின் வாழ்க்கை தரத்தை தி.நகர் ரங்கநாதன் தெருவில் போய் பாருங்கள் என்கிறார்.
ரங்கநாதன் தெருவில் அலையும் கூட்டம் பணம் கொழுத்துபோய் ஷாப்பிங் என்ற பெயரில் தினம் தினம் எதையாவது வாங்கிக்கொண்டிருக்கும் கூட்டமல்ல மற்ற இடங்களைவிட 50 ரூபாயோ 100 ரூபாயோ விலை குறைவாக கிடைக்கக்கூடிய காரணத்தால் தேவையான பொருட்களை நினைவு வரும்போதெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு மாதம் ஒருமுறை மொத்தமாய் வாங்கிப்போக குவியும் கூட்டம்.
இதை வாழ்க்கை தரத்தின் குறியீடாக கருதுகிறார் என்றால், அரசு மருத்துவமனைகளில் குவியும் கூட்டத்தையும் அங்கே நிலவும் சுகாதாரமற்ற சூழலும் நாட்டில் நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டின் குறியீடுதானே? இதை ஏற்றுக்கொள்வாரா?
ரங்கநாதன் தெரு போன்ற ஒரு சில வியாபாரத்தளங்களின் அடிப்படையில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை தரத்தையும் கணக்குபோட்டுக்க சொல்லும் இந்த மேதமை கோபண்ணா போன்ற காங்ரஸ் காரர்களைத்தவிர வேறு யாருக்கும் கைகூடாது.
ரங்கநாதன் தெருவில் அலையும் கூட்டம் பணம் கொழுத்துபோய் ஷாப்பிங் என்ற பெயரில் தினம் தினம் எதையாவது வாங்கிக்கொண்டிருக்கும் கூட்டமல்ல மற்ற இடங்களைவிட 50 ரூபாயோ 100 ரூபாயோ விலை குறைவாக கிடைக்கக்கூடிய காரணத்தால் தேவையான பொருட்களை நினைவு வரும்போதெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு மாதம் ஒருமுறை மொத்தமாய் வாங்கிப்போக குவியும் கூட்டம்.
ReplyDelete>>
நிதர்சன உண்மைதான்
chellaiasfghhhh
ReplyDeletechellaiah
ReplyDeleteஇது போன்ற குறுகிய விசயத்தை முகநூலில் பகிர்ந்து கொள்வது தான் சரியாக இருக்கும்.
ReplyDeleteஅன்பின் அகலிகன் - சிந்தனை நன்று - நிக்ழச்சி விமர்சனம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் அகலிகன் - சிந்தனை நன்று - நிக்ழச்சி விமர்சனம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete