குற்றங்களை கூட்டும் தண்டணைகள்!

 "உங்கள் மதங்களும், சட்டங்களும் உங்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றன"  - ஓஷோ 

"உலகம் முழுவது ஜனநாயகத்தை குத்தகைக்கு எடுத்து விநியோகிக்கும் உரிமம் பெற்ற அமெரிக்காவின் நெருங்கிய பங்காளி சவுதி அரேபியாவின் பத்திரிக்கையாளர் RaifBadawi க்கு 600 சவுக்கடிகள் தண்டனை. அவர் ஒரு சுவற்றில் முகம் புதைத்து நிற்க வேண்டுமாம், தலை முதல் கால் வரை 150 சவுக்கடிகள் குடுப்பார்களாம், அதன் பின் அவரை மருத்துவமணையில் அனுமதிப்பார்களாம், இப்படியாக 600 இது தவிற இரண்டு ஆண்டுகள் சிறை வேறு."

மேற்கண்ட தகவலை எழுத்தாளர்ஆய்வாளர்,களபணியாளர் .முத்து கிருஷ்ணன் நேற்று தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்

மனித உரிமை மீரல்களுக்கு எதிரானவர்களாய் தங்களை பிரகடணப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா தன் அறிவிக்கப்படாத பங்காளியானன சவுதி அரேபியா (இஸ்ரேலையும் சேர்த்துக்கொள்ளளாம்) எந்த அளவிற்கு மனித உரிமைகளை மீறுகின்றன என சுட்டிக்காட்டவே அவர் இதை பகிர்ந்திருப்பார் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. 

அரபு நாடுகளில் குற்றம் குறைவுதான் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்காரணம் கடுமையான தண்டனைகள்நடு ரோட்டில் கட்டிவைத்து தலையை சீவுவதுகல்லால் அடித்து கொல்வது என பல நம்பமுடியாத தண்டனைகள் பற்றி கேள்விபட்டிருப்போம்அத்தகைய தண்டனைகள் சரியாதேவையாஎன்பதுபற்றி பல விவாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. மேலும் அரபு நாடுகளில் மண்ணின் மைந்தர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. வெளி நாடுகளிலிருந்து வியாபரத்திற்காய் வேலைக்காய் அங்கே சென்றிருப்பவர்கள்தான் அதிகம். அத்தகைய ஒரு சூழலில் இத்தகைய தண்டணைகள் பெருப்பாலும் வெளி ஆட்களையே அதிகம் பாதிக்கிறது. சமீபத்திலும் ஒரு இலங்கை தமிழ் பெண் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

தண்டணை என்பது செய்த குற்றத்திற்காக கொடுக்கப்படுவதுமட்டுமல்ல இனியாரும் அத்தகைய குற்றத்தை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான்அதேசமயம் தவறு செய்தவன் திருந்துவதற்கான ஒரு வாய்பாகதான் தண்டணை இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய மனப்பான்மை. ஆனால் தண்டணை திருந்துவதற்கான வாய்ப்பாய் இருப்பது புதிய தவறுகளை தைரியமாய் செய்யவைக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்குன்னு கேப்பாங்க. இங்கே சட்டங்கள் தன் கை புண்ணுக்கு மட்டுமில்லை எதிராளியின் கை புண்ணுக்கும் சாட்சியாய் கண்ணாடி கேட்கிறது. கண்ணாடி சரியில்லை என்று சொல்லி உள்ளங்கை புண்ணையும் புண்ணே அல்ல அது வேறும் புடைப்புத்தான் என்று தீர்ப்பளிக்கிறது. கோடிகளில் ஊழல், சின்ன பெண்ணை கற்பழித்தது, மலைவாழ் பெண்களை பலாத்தாரம் செய்தது என சமூகத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்திய இதுவரையிலான  எந்த வழக்கிலாவது நியாயமான தீர்ப்பு கிடைத்திருக்கிறதா? குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? இத்தகைய மோசமான அனுபவங்களையும், முன்னுதாரணங்க்களையும் வைத்துக்கொண்டு ஒரு சாதாரண இந்தியன் எதனடிப்படையில் தண்டணைகள் குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பாய் இருக்கவேண்டும் என வழிமொழிய முடியும்? 110 கோடி மக்களும் ஆளுக்கு ஒருமுறை ஒரு தவறை செய்துவிட்டு திருந்துவதற்கான வாய்ப்பளிக்கும் தண்டணையை பெற்றுக்கொள்ள துணிந்தால் என்னவாகும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இது எந்தவகை சட்டம் என்று தெரியவில்லை. குற்றவாளிகள் ஏன் தப்பிக்க வேண்டும்? குற்றவாளிகள் எப்படிதப்பிக்கலாம்? அப்படி தப்பிக்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பளிக்கும் சட்டங்கள் எதற்கு?  சட்டமும், தண்டணையும் தப்பிக்க தெரியாத சாமானியனுக்குத்தானா? 

Comments

  1. மதம் என்பது மக்களுக்கு ஒருவிதமான போதை போலத்தான் உள்ளது. உள்ளே சென்றவர்களால் வெளியே வர முடிவதில்லை. வந்தாலும் இடைவிடாத அச்சம் ஒவ்வொருவருக்கும் ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கின்றது.

    விலகி நின்றால் வெளிச்சம் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. விலகி நின்றால் வெளிச்சம் சரி அது எதிர்மறையான வெளிச்சமாக நேர்ந்துவிடுகிறது என்பதாலேயே விலகினிற்க தயங்குகிறார்கள்.

      Delete
  2. சரியான கேள்வி...

    இங்கு அரபுநாட்டில் தண்டனைகள் மிக மிக மிக கடுமையானது. அதனாலேயே இங்கு சட்டம் ஒழுங்கமைப்பு சீராக இருக்கிறது.. அப்படியும் மீறி நடந்துவிட்டால் இந்த அரபு நாட்டவருக்கு தண்டனை குறைவு வெளிநாட்டவர் நம்மைப்போன்றோருக்கு தண்டனை கடுமையாக இருக்கும்...

    நம்மூரில் நீங்கள் சொன்னது போல அரசியலில் கொழிக்கும் அரசியல்வாதிகள், பணம் அதிகம் இருந்து என்ன செய்வதென்று தெரியாமல் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க நேரமில்லாது தான் உண்டு தன் வேலைகள் பிசினஸ் உண்டு இன்னும் பணம் சேர்க்கவேண்டும் என்ற வெறியில் ஒரு பக்கம் பெற்றோர் திரிய பிள்ளைகள் வெகு ஜோராக பலாத்காரம் போதைப்பொருள் என்று தான் தோன்றித்தனமாக...

    இப்படி இருப்போர், பஞ்சமா பாதகங்கள் செய்துவிட்டு இன்னமும் தலை நிமிர்த்திக்கொண்டு இந்த சமூகத்தில் கௌரவப்போர்வையில் திரிகின்றனர்..

    சொன்னது போல இவர்கள் எல்லாம் சட்டத்தின் பிடியில் சிக்க மாட்டார்கள்...

    சிக்கினாலும் வெளி வந்து விடுவார்கள்... தண்டனைகள் குறைவே....


    சட்டமும் தண்டனையும் பாவம் ஏழைமக்களின் வயிற்றில் அடிக்க மட்டுமே :(

    ReplyDelete
  3. தவறு செய்தவன் திருந்துவதற்கான ஒரு வாய்பாகதான் தண்டணை இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய மனப்பான்மை.//

    ஆனால் இன்னும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யும் தைரியம் வரவில்லை. குற்றவாளிக்கு மட்டுமல்லாமல் அவனுக்கு துணை போனதாய் சொல்லி ஏதோ ஒரு வகையில் அவனுக்கு தெரிந்தவனாய் இருந்தவனையும் தூக்கிலிடுகிறார்கள். (உ.ம். ராஜீவ் காந்தி கொலை வழக்கு)

    ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இது எந்தவகை சட்டம் என்று தெரியவில்லை. குற்றவாளிகள் ஏன் தப்பிக்க வேண்டும்? குற்றவாளிகள் எப்படிதப்பிக்கலாம்? அப்படி தப்பிக்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பளிக்கும் சட்டங்கள் எதற்கு? சட்டமும், தண்டணையும் தப்பிக்க தெரியாத சாமானியனுக்குத்தானா? //

    இது நம்ம நாட்டுல மட்டுமில்லீங்க உலகெங்கும் அப்படித்தான் நடக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்வது இதனால்தான். சட்டமும் தண்டனையும் நிச்சயம் சாமான்யனுக்கும் பிழைக்கத் தெரியாதவனுக்கும்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வழக்கை தூக்குதண்டணை வரைக்கும் கொண்டுசெல்லும் சட்டத்தின்மீதும், நீத்துறை ஜாம்பவாங்கள்மீதும் 100% நம்பகத்தன்மை ஏறபடுமாயின் தூக்கு தண்டணையைகூட சரிஎனக்கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது. 100% நம்பகத்தன்மை சாத்தியப்படுமா?

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment