அடுத்த நிதியமைச்சர் யார்?


டலர் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது, இதற்கு காரணங்களாய் அமெரிக்க பொருளாதாரம் உயருகிறது, அல்லது அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்த அவர்கள் இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்பபெறுகிறார்கள், நம் நாட்ட்டின் இறக்குமதி அதிகரிப்பு, அதை குறைக்க உற்பத்தியை பெறுக்கவேண்டும் என ஆயிரம் விஷயங்கள் சொல்லி விளக்கினாலும், விவாதித்தாலும் காமன்மேனுக்கு அவையெல்லாம் புரிந்துக்கொள்ளக்கூடியாதாய் இல்லை. அவனின் எதார்த்தமான கேள்வி,

அமெரிக்க பொருளாதாரத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? 

நாம் இருப்பது இந்தியாதானே? 

அவன் ஏன் இங்க முதலீடு செய்யனும்? 

அதை ஏன் திரும்ப எடுத்துட்டு போகனும்? 

இவன் இஷ்டபட்டா முதலீடு போடுவானாம் திடீர்னு அவனுக்கு தேவைபட்டா எடுத்துட்டு போயிடுவானாம் என்னய்யா அநியாயமா இருக்கு? 

இவன் என்ன வியாபாரம் பண்றானா சூது ஆடுறானா? 

மூனு சீட்டு ஆட்டத்துலகூட சம்பாதிச்சவன் பாதி ஆட்டத்துல எழுந்து போயிட முடியாது தெரியுமில்ல?  

இது அதவிட கொடுமையாயில்ல இருக்கு?

இந்த கேள்விகளுக்கு  என்ன பதில் சொல்வது என திணரவேண்டியிருக்கிறது. இந்த கேள்வியிலிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என யோசிச்சி “ சரிப்பா டாலர் மதிப்பு கூடுனா உனக்கென்ன குறஞ்சா உனக்கென்ன நீபாட்டு உன் வேலையை பாக்கவேண்டியதுதானே?” ன்னு அவனை ஒரு எதிர் கேள்வி கேட்டது தப்பா போச்சு.

பெட்ரோல் விலை கூடிடும், 
பஸ்கட்டணம் உயரும், 
காய்கறிகள் வாங்கமுடியாத விலையாயிடும், 
பால் விலையேரும், 
டீ விலையேரும்னு ஒரு பெரிய லிஸ்டே படிக்கறாங்க.

இதுக்கு என்னதான் வழின்னு நிதியமைச்சரை கேட்டா உற்பத்தியை பெருக்கனுங்கறாரு. 

இதையும் ஒரு காமன்மேன்கிட்ட சொல்லிபாத்தேன் 

“ உற்பத்தியை அதிகப்படுத்துவதுன்னா என்ன  நான் ஒரு நாளைக்கு 300 இட்லி சுட்டு விக்கிறேன் நாளையிலிருந்து 350 இட்லி சுடனுமான்னு" கேககறாரு ஒரு இட்லி கடைக்காரர்.

"பாசனத்துக்கு தண்ணியில்லாம தவிச்சப்ப காவிரில தண்ணி தரமாட்டேண்ண்னு தகராறு பண்ணினான் கர்னாடகாகாரன் அவங்கிட்டபோய் உற்பத்தியை பெருக்கனும் ஒழுங்கா தண்ணிவுடுடாண்ணு சொல்ல வேண்டியதுதானே இந்த நிதியமைச்சர்ன்னு" கேட்கிறார் ஒரு விவசாயி. 

உண்மையில் உற்பத்தியை அதிகரிப்பதுன்னா என்னான்னு நிதியமைச்சரையே கேட்டாக்கூட என்ன சொல்லிடபோறாரு அன்னிய முதலீடு உள்ள வரனும் அதைத்தவிர வேறவழியில்லைனபோறாரு. மறுபடியும் அவன் முலீடுபண்ணுவான் திரும்பப்பெருவான் நாம தலையில துண்டபோட்டுக்கனும் இதசொல்லத்தான் நிதியமைச்சர்ன்னா யார்வேண்ணா நிதியமைச்சரா இருக்கலாம் போல.

சரிப்பா நீதான் ஏதாச்சும் சொல்லேன்றிங்களா? 

தோற்றுப்போய் பல்லிலித்துக்கொண்டிருக்கும் தாரளமயமாக்கலையும், உலமயமாக்கலையும் இன்னும் தலையில் வைத்துகொண்டாடிக்கொண்டிருக்கும் தலைசிறந்த பொருளாதார புலிகள் மன்மோகன்சிங்கையும், சிதம்பரத்தையும்விடவா நான் ஏதும் சொல்லிடமுடியும்.


உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்க தெரிஞ்சுகறேன்.

Comments

 1. அடுத்த தேர்தல்ல யாரு ஜெயிச்சு ஆட்சியமைப்பாங்கங்கிறது ஒருத்தனுக்கும் புரிபடல.அதனால இப்போதைக்கு நம்ம ஆளுங்க (சிதம்பரம்,மன்மோகன்) இருக்கும் போதே பணத்த தூக்கிருவோம்.அப்புறம் வர்றவன்கிட்ட பேரம் படிஞ்சா திரும்ப கொண்டாரலாம்னு செயல்படுதாங்க.அதுக்கு வசதியா அவங்க ஆளுங்க (சிதம்பரம்,மன்மோகன்) செஞ்சு கொடுத்த வசதி தான் இந்த வீழ்ச்சி,அருவி எல்லாம்.பாகிஸ்தானு,இலங்கைய விட நம்ம துட்டு மதிப்பு கூட இருக்குங்கறத நெனச்சி சந்தோச படுவியளா அத உட்டுட்டு.

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் காங்ரஸ் கெளிச்சா நான்தான் முன்னமே சொன்னமுல அன்னியமுதலீடுதான் சரின்னு சொல்லி மறுபடியும் சிவப்பு கம்பளம் விரிக்கலாம். அப்போ அவிங்களும் இருகறதவிட நீங்களாதானே கூப்புடுதீக அதால மேற்கொண்டு எதுனாச்சும் பொட்டுகொடுண்ணு கேட்டுவாங்கிகிடுவாப்போல. எல்லாம் கெரகம்.

   Delete

 2. http://deviyar-illam.blogspot.in/2011/12/blog-post_11.html

  இது குறித்து நான் எழுதியது.

  ReplyDelete
  Replies
  1. நீங்க அப்பவே எழுதிட்டீங்க. எவங்கதான் இன்னும் மாறலபோல.

   Delete

Post a Comment