எல்லா பெண்களைப்போலவே
என் பொண்டாட்டியும் புருஷன் சொன்னாமட்டும் கேட்டுக்கவே மாட்டா? அதான் இன்னிக்கு சரியான
படம் கத்துகொடுக்கனும்னு முடிவுபண்ணிட்டேன். எனக்கு வந்த ஆத்திரத்திற்கு TV யை தூக்கிபோட்டு
உடைக்கலாம்போல இருந்தது. ஆனா நஷ்டம் எனக்குத்தானேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன் TV யை
OFF பண்ணிட்டு அதே கோவத்தோட பொண்டாட்டியபார்த்து “நான் ஏற்கனவே சொன்னேல்ல அவனை நம்பாதேன்னு,
நீதான் இல்ல அவன் நல்லவன் இவ்வளவு பணம் காசு இருந்தும் என்வளவு சிப்பிளா இருக்கான்பாருங்க,
அவன் பேச்சும் நடவடிக்கையும் எவ்வளவு பண்பா இருக்கு பாருங்கன்னு என்னை கன்வின்ஸ் பண்ணின,
அவங்கிட்ட பணம் இருக்குன்னுதானே அந்தபொண்ண ஒருவார்த்தைகூட கேக்காம அவனுக்கு கட்டிவெக்கறாங்கன்னு
நான் கேட்டப்ப செச்..சே அதெல்லாம் இல்லைங்க அவன் ரொம்ப நல்லவன்னு சொன்ன, இப்ப எங்கிட்டவந்து
அவன் எப்படி பேசறான் பாருங்கன்னா, நான் என்ன
செய்யமுடியும்? நான் எடுத்துச்சொல்லும்போதெல்லாம்
ஏதாவது சொல்லி என்னை சமாளிச்சுட்டு இப்ப குத்துதே கொடையுதேன்ன ? நல்லா கேட்டுக்க இதுதான் கடைசி இனிமே இதெல்லாம் ஒரு விஷயமா எங்கிட்ட
சொல்லிகிட்டு வரக்கூடாது என்ன புரியுதா" என கத்திவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டேன். என் கோபத்தின்
நியாயம் புரிந்ததினால் குற்றவுணர்வில் தலை குனிந்து நின்றிருந்தாள். அவள் கண்கள் லேசாய்
கலங்கி இருந்தது. அவள் எப்பவுமே இப்படித்தான் யாரையும் எதையும் வெகு சுலபத்தில் நம்பிவிடக்கூடியவள்
பின் அது அப்படியாயிடிச்சு, அவன் இப்படி பண்ணிட்டான்ன்னு ஒரே புலம்பல். அதான் TVயில் ஓடிகிட்டிருந்த தென்றல் சீரியலை OFF பண்ணீட்டேன் இனி எதபாத்து பொலம்பறான்னு பாப்போம்.
Comments
Post a Comment