சஸ்பென்ஸ்! யாராவது சொல்லுங்களேன்


சஸ்பென்ஸ் 1 :

கண்னத்துலயே ஓங்கி ஒரு அறைவிட்டான் ஆனாலும் அந்த பொம்பள நிலைகுலயாம நின்னுட்டு அவனை என்னமோ திட்டிகிட்டிருந்தா. அவனுக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகி மறுபடியும் அடிக்கறான் இந்தமுறை அவ சுதாரிச்சுகிட்டா அடி அவமேல படல சுழட்டின வேகத்துல அவந்தான் தடுமாறி விழப்பாத்தான். அவனுடைய தடுமாற்றம் பாக்க சிரிப்பா இருந்தது. வேடிக்கை பாத்துகிட்டிருந்தவங்க சில பேரு சிரிக்கவும் செஞ்சாங்க. திடீர்ன்னு ஒரு தண்ணிலாரி என் சன்னலுக்கு குறுக்க வந்து நின்னுட்டதால அதுக்கப்பறம் என்ன நடந்த்துன்னு தெரியல. நமக்கு அதுவாமுக்கியம்,
இன்னிக்குவிட்டுட்டா 2 நாணைக்கு லாரி வ‌ராது அதுதான் முக்கியம்.அவசர அவசரமாய் ஓடி 2 குடம் தண்ணி புடிச்சிவெச்சிட்டு ஒருவழியா மத்தவேலைகளையும் முடிச்சு அதே சன்னல்ல வந்து உக்காந்து பாத்தா தெருவே வெறிச்சோடிகிடக்கு.அதுக்து அப்புறம் என்ன நடந்திருக்கும்? அந்த பொம்பள என்ன ஆனா?


சஸ்பென்ஸ் 2 :

அவன் வயது 22. தன் 10 ஆம் வயதில் முதல்முறையாய் நண்பர்களோடு கெட்டவார்த்தை பேசத்தொடங்கியவன் படிப்படியாய் கெட்ட பழக்கங்களையும், காரியங்களையும் செய்யத்தொடங்கி ஊர்மக்களின் பார்வையில் பொறுக்கியாகவும் ரவுடியாகவும் அறிப்படும்போது அவன் வயது 18. எப்போதுமே அடாதவர்களின் சவகாசம் தேவைப்படும் அரசியல் அல்லக்கைகள் அவன் சண்டித்தனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது அது அவனுக்கு மேலும் பல வழிகளியும் நம்பிக்கைகளையும் அளித்து அவனை முழுநேர அடியாளாக்கியது. அது அவன் பிறந்து வளர்ந்த ஏரியா என்பதால் எல்லோருக்கு அவனைத்தெரியும், அவனுக்கும் எல்லாரையும் தெரியும். அவன் எல்லாருடனும் சகஜமாக பேசக்கூடியவந்தான் ஆனால் அது பெரும்பாலும் எதிராளியை மட்டம்தட்டுவதாயும், எரிச்சில் ஊட்டுவதாயுமே இருக்கும், ஆனாலும் இவனின் ரவுடித்தால் எலாருமே சிரித்து மழுப்பி நழுவிவிடுவார்கள். இந்நிலையில் திடீரென ஒருநாள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நெற்றியில் பட்டை, கறுப்பு வேட்டி,  சட்டை என அமக்களாமான கெட்டப்பில் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு பயபக்தியோடு திரியத்தொடங்கினான். அவன் பேச்சு நடவடிக்கை எல்லாமே மாறியிருந்தது. மிகவும் சாதுவாகவும் நல்லவனாகவும் மாறிவிட்டான். சினிமாவில் வருவதுபோல் ஊரே அவனைப்பற்றிதான் பேசிக்கொண்டது. "அவனுக்கு பொண்ணுபாக்றாங்கப்பா அதான் பையன் கொஞ்சம் ஒழுங்கா இருக்க ட்ரைப்பண்றான்" எனவும் "பேஸிக்கா அவன் நல்லவந்தான் சில அரசியல் சுயநலவாதிகள்தான் அவனை இப்படி ரவுடியாக்கிட்டாங்க" எனவும், "பேருதாம்ப்பா ரவுடி ஆனா அவன் இந்த ஊருல யார்கிட்டையும் தகராறு பண்ணதேகிடையாது, என்ன கொஞ்சம் ஓவரா பேசுவான் அவ்வளவுதான்" எனவும் பேசிக்கொண்டார்கள். இந்த ஒரு மாதத்தில் அவன் கிட்டத்தட்ட ஏரியா ஹீரோவாகவே மாறிவிட்டான். ஜனவரி 16 மலைக்குப்போய்விட்டு வந்தவன் அன்று இரவே தற்கொலை செய்துகொண்டான். மாலை 4 மணிக்குள் உடல் தகனமும் செய்யப்பட்டுவிட்டது. இது தற்கொலையில்லை இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.


சஸ்பென்ஸ் 3 :

5 வருஷத்துக்கு முன்னால் 15 வயசிருக்கும் அவனுக்கு கலையானமுகம் எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பான். அபாரமா புட்பால் ஆடுவான். சிலநேரங்களில் கேரம்போர்டும் ஆடுவதுண்டு. ஆரம்பத்துல காக்கி பேண்ட், வெள்ளை சட்டையில் பார்த்திருக்கேன். அப்புறமான ஆண்டுகளில் எப்பவும் ஒரு லுங்கிதான் அவன் வேலைவெட்டி எதுக்குமே போனதில்லை. எப்பவுமே அந்த ஏரியா வாட்டர் டேங்கிட்டதான் இருப்பான். சுத்தி எப்பவுமே நாலுபேரு இருப்பாங்க. அவங்க இருக்கற இடம் புகைமூட்டமா இருக்கும். கஞ்சா புகைப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். ராத்திரி நேரங்கள்ல ஃபுல்ல குடிச்சிட்டு யாரையெல்லாமோ திட்டிகிட்டிருப்பான். ஒரு கட்டத்துல அவன் மூஞ்சியவே பாக்கமுடியாதபடி விகாரமா மாறிடிச்சு. குடிக்க காசு இல்லைன்னா முகம்தெரியாத யாரையாவது மடக்கி வம்பிழுத்து காசு வாங்கிவிடுவான். சமீபத்தில் ரொம்ப மெலிஞ்சுபோயிருந்தான். திடீர்ன்னு ஒருநாள் செத்துபோய்ட்டான். அவன் தானா சாகவில்லை அவன் தொல்லை தாங்காமல் சொந்தகாரங்களே சாகடிச்சுட்டாங்கன்னு பேசிக்கறாங்க.

ஒண்ணுமே புரியல‌ நீங்கதான் யாராவது சொல்லுங்களேன்.

Comments

  1. "அதுக்து அப்புறம் என்ன நடந்திருக்கும்? அந்த பொம்பள என்ன ஆனா?"

    அந்த பொம்பளையும் புருசனும் கட்டி பிடிச்சுக்கொண்டு வீட்டு போய்விட்டாங்க

    ReplyDelete
  2. "ஒண்ணுமே புரியல‌ நீங்கதான் யாராவது சொல்லுங்களேன்."

    அவனுக்கு எயிட்ஸ்

    ReplyDelete
  3. //இன்னிக்குவிட்டுட்டா 2 நாணைக்கு லாரி வ‌ராது அதுதான் முக்கியம்.அவசர அவசரமாய் ஓடி 2 குடம் தண்ணி புடிச்சிவெச்சிட்டு ஒருவழியா மத்தவேலைகளையும் முடிச்சு அதே சன்னல்ல வந்து உக்காந்து பாத்தா தெருவே வெறிச்சோடிகிடக்கு.அதுக்து அப்புறம் என்ன நடந்திருக்கும்? அந்த பொம்பள என்ன ஆனா?//
    தண்ணி பிரச்னை ஒங்களுக்கு மட்டுந்தானா?.அவளுக்கு இருக்காதா?.அவளும் தண்ணி புடிக்க கொடம்,தவலை பானய எடுக்க போயிருப்பா.
    //இது தற்கொலையில்லை இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்//
    தெய்வம் நின்று கொன்றிருக்கும்.
    //திடீர்ன்னு ஒருநாள் செத்துபோய்ட்டான்//
    நீங்க பொணத்த பாத்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. தெய்வம் நின்று கொன்றிருக்கும்ன்னு சொன்ன ஆங்கிள் எனக்கு பிடிச்சிருக்கு.

      Delete
  4. அகலிகன்,

    மூனு ‘சஸ்பென்ஸ்’ கதை எழுதின உங்களுக்கு, ஒன்னுக்குக்கூட விடை தெரியாம, எங்களைக் கேட்குறீங்க!!

    இது ஏன்னு புரியல??

    நீங்களே சொல்லுங்களேன்!

    ReplyDelete
    Replies
    1. இது கதையல்ல, உண்மையில் கண்டது, நான்மட்டுமல்ல இதுபோல் பலவற்றை பலர் பார்த்திருப்பார்கள். யாராவது சொல்லுங்களேன் என்று முடித்திருப்பது என் ஆதங்கம்.

      Delete

Post a Comment