பட்ஜட் கூட்டத்தொடரின் முதல் நாள் பேச்சில் பிரணாப்முகர்ஜி உணவுதானியம், பால், உரம் ஆகியவற்றின் உற்பத்தியை பலமடங்கு பெருக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். உணவு தானியங்கள் உற்பத்தி ஹுன்டாய் கமபனியிலிருந்து கிடப்பதாய் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. விவசாயிகள் மாற்று தொழிலில் ஈடுபடவேண்டியதுதானே என்றும் விவசாயத்தையே நம்பியிருக்கவேண்டி யார் நிர்பந்தித்தார்கள் என்றும் கேட்டதுதான் இந்த அரசு. பெருகிவரும் ரியலெஸ்டேட் வியாபாரத்தை கவனிக்கையில் உணவுதானிய உற்பத்தியை உயர்த்தபோகிறோம் என்ற ஜனாதிபதியின் பேச்சு சிரிப்பைத்தான் வரவைக்கிறது.
கூடங்குள அனு உலைகள் இந்த ஆண்டு செயல்படத்தொடங்கும் என்றும் மேலும் இரண்டு உலைகள் விரைவில் தடங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். நெஞ்சழுத்தம்ன்னு சொல்வாங்களே அது இதுதான். கூடங்குள போராட்டக்காரர்கள் உலை கட்டிமுடிக்கும்வரை சும்மா இருந்துவிட்டு எல்லா பணிகளும் நிரைவடைந்துவிட்ட தருவாயில் போராட்டத்தை முன்னெடுப்பது நியாயமற்ற செயல் என்றும், இது சிலரின் தூண்டுதலால்தான் நிகழ்கிறது, வெளிநாட்டிலிருந்து பண பரிவர்த்தனை நடக்கிறது என ஏதேதோ வாய்க்கு வந்ததை உளரித்தீர்தவர்கள் மேலும் இரண்டு உலைகளை திறக்க திட்டமிட்டிருக்கிறார்களென்றால் இதை நெஞ்சழுத்தம் என்று சொல்லாமல் என்ன சொல்ல.
Comments
Post a Comment