எந்த தேசத்தில் காந்தி பிறந்தார்?







என்னதான் திட நெஞ்சமாக இருந்தாலும் பிரபாகரனின் மகன் சுடப்பட்டு கிடக்கும் காட்சியை கண்டு இதுவும் போர்குற்றங்களில் ஒன்று என கடந்துசெல்ல முடிந்தாலும். சுடப்படுவதற்கு முன் அந்த சிறுவனின் பார்வையும் மனநிலையையும் காட்டும் அந்த படங்களோடு சேர்த்து வரிசையாக பார்க்க நேர்ந்தபோது ஒரு நொடி கதிகலங்கிவிட்டது உண்மை. இலங்கை அரசின் போர்குற்றம் மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் செய்யத்துணியும் எல்லா குற்றங்களூக்கும் இந்திய அரசின் சபோர்ட் இருக்கும் என்பது ராஜபக்சேவுக்கு தெரியும். காரணம் இந்திய வெளியுரவுக்கொள்கையை உறுவாக்குவது இந்தியரல்ல( இத்தாலியர்). எனவே சுதந்திரத்திற்குபின் உலகமே வியக்கும்படியான வெளியுறவு கொள்கையை உருவாக்கிய நேரு அவர்களின் மகள் வேண்டுமானால் இந்தியாவின் அன்னையாக நடந்துகொண்டிருக்கலாம்( இலாமலும் இருக்கலாம்) ஆனால் சோனியா நிச்சயமாக இந்தியாவின் மருமகளாகத்தான் நடந்துகொள்கிறார்.( எந்த தொலைக்காட்சி தொடரிலாவது எந்த மருமகளாவது மாமியார் வீட்டின்மேல் அக்கறையாக இருக்கின்றாரகளா?)

ராஜபக்சேவுக்கும், இலங்கை அரசின் நடவடிக்கைகளூக்கும் இதுவரை எந்தவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காத இந்திய அரசு சொல்லும் காரணம் சீனா. இலங்கை அரசுடன் நாம் மேற்கொள்ளும் உறவே சீனா இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவை தீர்மானிக்கும் என்பதுவாதம். இது ஒருவிதத்தில் சரியானதாகவும் இருக்கலாம் ஆனால் மனிதனேய அடிப்படையில் இது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அந்த 12 வயது குழந்தையின் மரணம்கூட இந்திய அரசின் மனதை மாற்றவிலையென்றால் அது எந்த அளவு இறுகிப்போய் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. இப்படியான தேசத்தில்தான் காந்தி பிறந்தாரா? 

Comments

  1. தமிழீழப் பகுதிகளில் பன்னாட்டுப் படைகளை நிறுத்தி சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு நடத்திட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. சர்வதேசியத்தின் நிர்பந்தமே இதற்கு ஒரு ந்ல்ல முடிவைத்தரும் என்றாலும் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியம். ஆனால் ஆளும் காங்ரஸ் அதற்கு எதிராகத்தான் செயல்படுகிரது.

      Delete
  2. கொடுமையான காட்சி! இந்தியா இனியும் சும்மா இருக்க கூடாது!

    ReplyDelete
    Replies
    1. சும்மாத்தான் இருப்போம் என்பதாய்தான் இருக்கிறது அரசின் செயல்பாடு.

      Delete
  3. வேதனை தரும் செய்தி.....

    ReplyDelete

Post a Comment