கடல் அளவு காதல் ஒரு அனுபவம்.





கருமேக கூட்டமில்லா
நீல வானத்திற்கும்,
ஹா..வென பேரிரைச்சலோடு
பரந்துகிடக்கும் நீ....ள கடலுக்கும்
இடைப்பட்ட வெட்டவெளிக்குள்
கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின்
நடுவே ஒற்றையாய்
சிரித்துக்கொண்டிருக்கிறது
நிலா!

விட்டுச்செல்ல மனமில்லாமல்
அதன் வெள்ளைச் சிரிப்பில்
சிக்குண்டவனாய் நான்....

யுகம் யுகமாய்
வந்துபோகும் நிலவிதிலே
முழுதாய் கண்வைக்கவே ஆளில்லை,
கால்வைத்தவன் புகழ்பேச
வாய் கிழியும்.

கண்ணெதிரே கொட்டிக்கிடக்கும்
கொள்ளை அழகையும்
கேமராவில் காட்டினால்
கைதட்டும் - மற்றபடி
எங்கும் குப்பைகொட்டும்.

நிலவை பருகும் மயக்கத்தில்
மறைந்துவிட்டன சில‌
மணித்துளி
வெறிச்சோடத்தொடங்கியது
மணல் வெளி.

ஆளில்லா கடற்கறையை
மொத்தமாய் குத்தகைபிடித்தவனாய்
ஓடித்திரிந்தேன், பாடிப்பற‌ந்தேன்
மணல்வீடு கட்டி
அதில்
மனம்போல் வாழ்ந்தேன்.

நேரம் ஆக ஆக
கட்டிப்பிடித்திருந்த சில‌
காதல் ஜோடிகளும்
எட்டி நடைபோட்டன
சாலையை நோக்கி.

இப்படி ஒரு சொர்க்கம்
இங்கிருக்க
பேரிரைச்சல்களாலும்,
அர்தமில்லா விரைவுகளாலும்,
சுயநல சூழ்ச்சிகளாலும்
சோர்வடையச்செய்யும் பக்கத்து
நரகத்தின்பால்
எதைத்தேடி விரைகின்றனர்
என்ற கேள்விக்கு
விடைதேடி நேரத்தை
வீணடிக்கவிரும்பாததால்
பார்வையை விலக்கிக்கொண்டேன்
கடல்நோக்கி.

கடற்கறை மணலில்
காலடிச்சுவடுகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
நினைவுகள்.
எவர்தடம் எதுவென்று
எவர் சொல்லமுடியும் - எவர்
சுவடும் எவர் பதிவும்
எடுத்தெரியவும், மறுதலிக்கவும்
எவரால் முடியும்.

காலப்பெருவெளியில்
காற்றாடியாய் சுழன்றாலும்
கடைசி என்னவோ
மண்ணில்தான்.
ஏற்கமுடியாதவருகே
வாழ்க்கை போராட்டம் - அல்லாதவர்க்கு
பூந்தோட்டம்.

இவ்வாறெல்லாம் எண்ணியபடி
மணல் மடியில் தலைவைத்து
அலையோசை தாலாட்டில்
சற்றே கண்ணயர்ந்தேன்.
இரண்டு கடமையுணர்வு லட்டிகள்
தட்டியெழுப்பி அழைத்துச்சென்றனர்
சந்தேகத்தினடிப்படையில்.






Comments

  1. இறுதியாய் நாட்டு நடப்பு இப்படித்தாங்க இருக்கு......

    அழகிய கவிதை....


    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாசித்தமைக்கும், தஒடர்வதற்கும் நன்றி திரு கவிதை வீதி.

      Delete
  2. வசீகரமான கவிதை நடை. கவிதையும் அதன் கருத்தும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு முரளிதரன். தமிழ்மண ஓட்டுபட்டை இணைக்க முயற்சித்தேன் சரியாக புரியாததால் விட்டுவிட்டேன். இப்போது மீண்டும் முயற்சிக்கிறேன்.

      Delete
  3. தமிழ்மண வாக்குப் பட்டை இணையுங்களேன் அகலிகன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணத்தின் வாக்கு பட்டையை இணைப்பது எப்படி என்பதை எனக்கு தெரியபடுத்தினால் உதவியாக இருக்கும். பதிவு பட்டையை இணைப்பது பற்றிய தகவல் உள்ளது ஆனால் வாக்கு பட்டைபற்றி எதுவுமே காணப்படவில்லையே. எங்கே சென்று என்ன செய்யவேண்டும். உதவுங்கள்.

      Delete
  4. நல்ல அனுபவக் கவிதை தோழரே. இக்கவிதைகயை வாசிக்கையிலே நீண்ட நாட்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு பதிவை நினைவுபடுத்டியது. பொழுதிருந்தால் வாசித்துப் பாருங்கள் ( http://varunan-kavithaigal.blogspot.in/2011/04/blog-post_18.html). தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருண் தங்கள் கவிதை அருமை கடல் பரப்பில் தழும் வெளிச்சத்தை உடந்த கண்ணாடிசில்லுகளாய் யூகித்திருப்பது சூப்பர், கதராடையை நெகிழ்த்திய காற்று நெஞ்சை நிறைத்தது. பல நாட்களுக்கு முன் ஆன்டன் செகாவின் பந்தயம் சிறுகதை வாசித்திருக்கிறேன் அது உங்கள் தளம்தான் என நினைக்கிறேன். மீண்டும் நன்றி.

      Delete

Post a Comment