FDI யால் பாதிப்பு - நமக்கென்ன?


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டால் நேரடியாய் பாதிக்கப்படப்போகும் சிறு வணிகர்களை பாதுகாக்க அரசு மேற்கொண்டுள்ள‌ நடவடிக்கை என்ன?  மூன்று நாட்களுக்குள் விளக்கம் வேண்டும். - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி.

நடவடிக்கையோ திட்டமோ இருந்தாத்தான் எதிர்ப்பு வந்தபோதே சொல்லி தொலைச்சிருப்பாங்களே. வ‌ழக்கம்போல மழுப்பலான பதில்களை இனிதான் ரெடிபண்னனும். அதுக்குத்தான் மூன்றுநாள் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன்னாடி இதே நீதிமன்றம் இந்திய உணவு கழகத்தால் பாதுகாக்கமுடியாமல் வீணாகிக்கொண்டிருந்த‌ பல ல‌ட்சம்ரூபாய் மதிப்பிலான தாணியங்களை பாதுகாக்க வேண்டியஏற்பாடுகளை செய்யுங்கள் அல்லது ஏழைகளுக்கு பிரித்து கொடுத்துவிடுங்கள் என்று ஒரு யோசனையை பரிந்துரைத்தபோது,  " அரசின் கொள்கை முடிவுகளிலெல்லாம் நீதிமன்றம் தலையிடக்கூடாதுன்னு " புலம்பிய‌ அரசுதானே இது. அதேபோல இதுக்கும் எதையாவது சொல்லிட்டு(புலம்பிட்டு) போறாங்க விடுங்க. சிறு வியாபாரி என்ன ஆன உங்களுக்கென்ன, அது ரெண்டு வியாபாரிங்களுக்கு நடுவுல எப்பவுமே இருப்பதுதானேன்னுகூடா நிதியமைச்சர் சொல்லக்கூடும், யார்கண்டா?

Comments

  1. நன்மைகள் இருந்தால் அதை கட்டாயம் விளக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்மைகள் உண்டு நிறுவனங்களுக்கு,நமக்கல்ல.

      Delete
  2. Indian Govt provides INvoluntary Retirement Scheme to small business owners in India!!!.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் அப்படி ஒரு ஏற்பாடு இருந்தால் மகிழ்ச்சியே ஆனால் அது எத்துனைபேருக்கு தெரியும் அதன் நடைமுறைகளும், சிக்கல்களும் எளிதில் கையாளக்கூடியதா?

      Delete

Post a Comment