நாளைய‌ சூப்பர் ஸ்டார் ! யார்?


சூப்பர் ஸ்டார் யாருன்னுகேடா சின்ன குழந்தையும் சொல்லும், கரெக்ட்டுதான் யார் இலைன்னா. இன்னிக்கும் சின்னகுழந்தகளை சினிமா நடிகர்கள்தான் அதிகம் கவர்ந்திருக்கிறார்கள். அப்போ அவரை தெரிந்திருந்தது இப்போது இளைய தளபதி யாரென்றும், தல யாரென்றும்கூட குழந்தைகளுக்கு தெரிந்துதான் இருக்கிறது.  காலுக்கு ஒன்றாய் ஜீப்பை கட்டி இழுப்பதும் இரண்டு கைகளாலும் கையொப்பமிடுவதும் என பலசாகசங்களை செய்துகாட்டக்கூடியவர்கள்தான் நம் கதாநாயகர்கள், அந்த சாகசங்களால் கவரப்படுகின்றனர் குழந்தைகள். ஆனால் அதெல்லாம் திரையில்மட்டுமே என்பதை குழந்தகளுக்கு யார் சொல்வது? சொல்லவேண்டிய கடமையுள்ள ஊடகங்களும், அதை அப்படியே சுவிகரித்துக்கொள்ளும் சமூகமும் மேலும் மேலும் ஊக்கப்படுத்தவே உதவுகின்றன. 

உண்மையில் சூப்பர் ஸ்டார் என்பவர்கள், தன் திறமையையும் அதனால் சமுதாயத்தில் தனக்கு கிடைத்த மதிப்பையும், அங்கிகாரத்தையும் நல்ல வாய்ப்பாக நினைத்து அதை சரியான முறையிலும், ஆக்கப்பூர்வமான வழிகளிலும் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகாட்டியாய் (வழிகாட்டியாய் இல்லாவிட்டாலும் தன்னளவிலேனும் வாழ்ந்துகாட்டவேண்டும் ) இருக்கவேண்டும்.

1893 செப்டம்பர்மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடந்த உலக ஆன்மீக மாநாட்டில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு விவேகானந்தர் ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது. ஆனால் அந்தவாய்ப்பு அவருக்கு நேரடியாய் வாய்த்ததல்ல. இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்குதான் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதி விவேகானந்தரிடம் உள்ள அறிவாற்றலின்மீதும், ஆன்மீகச் சிந்தனையின்மீதும், அகன்ற பார்வையின்மீதும் , ஞானத்தின்மீதும் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு அளிக்கவைத்தது.

விவேகானந்தர் அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தினார் ( பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்லக்கூடாது ) அந்த மாநாட்டில் அவர்  "இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன." என இந்துமதத்தின் பலம் பற்றி எடுத்துச்சொன்னவிதம் அனைவரையும் கவர்ந்தது. அதேசமயம் அவர் இந்துத்துவதின் கொடியை உயர்த்திப்பிடிக்கவும் இல்லை.

மதங்களுக்குள்ளான பேதங்களுக்கு காரணமாய் அவர் சொன்ன கிணற்றுத்தவளை கதை நாம் அறிந்ததுதான். அக்கதையையி முடிவில் "நான் இந்து என்னும் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான்" தன் மதத்தைமட்டுமே உயர்த்திப்பிடிப்பவன் இந்துவாகவோ வேறு யாராகவோ இருந்தாலும் அவன்கிணற்றுத்தவளையே என உறுதியோடும் நடுநிலையோடும் எடுத்துச்சொன்னார்.

இந்த உறுதியும் துணிவும் எந்த நாய‌கர்களிடமாவது காண‌முடிகிறதா?  எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு தான் வாங்கும் எல்லா பொருளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுக்கு வரி செலுத்திக்கொண்டிருக்கும் ஏழை பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வரியை அரசு குறைக்கவேண்டும் என்று இதுவரை எந்த நாய‌கராவது குரல் கொடுத்திருக்கிறாரா? குறந்தபட்சம் தன் படங்களை பார்கவருபவர்களுக்காவது கேளிக்கை வரியை விலக்கக்கோரியிருப்பார்களா? தன் வருமானத்தில் கைவைத்தவுடன் பொங்கி எழுந்துவிடுகிறார்களே?  இவர்கள்தான் இன்றைய மற்றும் நாளைய‌ சூப்பர் ஸ்டார்கள்.  


Comments

 1. இந்த உறுதியும் துணிவும் எந்த நாய‌கர்களிடமாவது காண‌முடிகிறதா? எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு தான் வாங்கும் எல்லா பொருளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுக்கு வரி செலுத்திக்கொண்டிருக்கும் ஏழை பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வரியை அரசு குறைக்கவேண்டும் என்று இதுவரை எந்த நாய‌கராவது குரல் கொடுத்திருக்கிறாரா?


  மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  படிப்பது ராமாயணம்
  இவர்கள் இடிப்பதெல்லாம் ராமர் கோவில்கள்தான்
  யதார்த்தம் சொல்லும் அருமையான பதிவுக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment