நீதியின்பால்
நம்பிக்கைகளை
பழுதாக்கிக்கொண்டிருப்பது
நீதிமன்ற கதவு...
நம்பிக்கைகளுக்கெதிராய்
சாத்தான்களால் ஓதப்படும்
வேதம் -
காவல்நிலைய கதவு...
நிகழக்கூடாதவைகள் எதுவும்
நிகழ்த்துவிடக்கூடிய
சாத்தியங்களை கொண்டிருக்கிறது
மூடிய கதவு....
விடுதலையின் வெளிப்பாடாய்
விரிந்துகிடக்கிறது -
திறந்திருக்கும் கதவு...
நிராகரிப்பை வழிமொழியும்
விசுவாசி -
முகத்தில் அரைந்து
சாத்தப்படும் கதவு...
ரகசியத்தின் வீடு
மனம்
வீட்டின் ரகசியம்
கதவு...
ஒவ்வொரு கதவும்
அடைகாக்கின்றது
பல புழுக்கங்களை
ஒவ்வொரு வீடும்
அடைகாக்கின்றது
பல கதவுகளை...
வீடும் கதவும்
விலக்கியே வைத்திருக்கிறது
நம்மை நம்மிடமிருந்தே!
தகர்த்தெறியும்
பிரயத்தனத்தில்
தகர்ந்துகொண்டிருக்கிறது
பிரயத்தனங்களின்
கதவு...
படம் google
வீடும் கதவும்
ReplyDeleteவிலக்கியே வைத்திருக்கிறது
நம்மை நம்மிடமிருந்தே!
யதார்த்தமான உண்மையை அழகாக சொன்னீங்க.
வருகைக்கும், தொடர்வதற்கும் மகிழ்ச்சி,
ReplyDeleteதங்கள் காமடி கும்மி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி.