பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தேயிருகின்றன - ஹீனா ரப்பானி கர்
(பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்)
கடந்தமுறை நறுக்கப்பட்ட
நாசியின் நரம்புகளை
தடவிக்கொண்டே,
இந்தமுறையும்
தொடங்குகின்றோம்
நம் கருத்துப் பரிமாற்றங்களை
பொய்யின் பரிவாரங்களோடு.
தொழுதகையுள்
ஒடுங்கும் படையோடு
பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம்
சமாதானத்தின்
கட்டுமானங்களை.
உணர்ச்சித்ததும்பும்
வார்த்தை ஏய்ப்புக்களால்
மேய்த்துக்கொண்டிருக்கிறோம்
அமைதி வேண்டிநிற்கும்
வெள்ளாடுகளை.
வெள்ளை புறாக்களை
கறிசமைக்க உறித்துவிட்டு
இறகுகளை ஏந்திவருகிறோம்
சமாதான உடண்படிக்கைக்கு.
படம்: google
இந்தப் படம் ஏற்கத் தக்கதல்ல, இந்தியா அடாவடி செய்வதில்லை, ஒருத்தன் [பக்கி] மட்டும் கத்தி வைத்திருப்பதே சரி.
ReplyDeleteதேடியதில் பொருந்தியது இது மட்டுமே. மேலும் நம் கை ஆயுதம் அஸ்சாமிலும், ஜார்கண்டிலும் என பல இடங்களில் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதை நாம் மறக்கக்கூடாது (மறைக்கக்கூடாது)
Deleteமித மிஞ்சிய பொறுமையும் சகிப்புத் தன்மையுமே நம்மை பிறர் ஏய்ப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
ReplyDeleteஉண்மைதான் ஆனால் அந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் யாரோ சிலரின் ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் திணிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
Delete