புறக்கணிக்கப்படுதலின்
வலியறியாதவரை
புறக்கணித்துக்கொண்டே
பயணிக்கிறோம்
எவரையாவது.
எதிரெதிராய்
அமர்ந்திருப்பவர்களில்
ஒருவர்
புறக்கணிக்கப்படுகிறார்
மற்றவரால்
ஏதோ ஒரு வகையில்.
நியாயமான வாதிகளுக்கு
சேரவேண்டிய
நீதியை புறக்கணிக்கின்றன
பிரதிவாதியின்
வாய்தாக்கள்.
நேர்மையான எல்லா
கோரிக்கைகளும்
புறக்கணிக்கப்படுகின்றன
அரசியல் தரகர்களின்
தலையீடுகளால்.
சாதியின் நீள்கரங்கள்
புறக்கணிக்கின்றன
காதலின் சுகந்தத்தை.
பாதிக்கப்பட்டவரின்
வலியும் வேதனையையும்
புறக்கணிக்கின்றன
ஊடகங்கள்
திரும்பத்திரும்ப காண்பிக்கப்பட்டு.
புறக்கணிக்கப்படநேரும்
ஒவ்வொருமுறையும்
மனதிற்குள் எட்டிப்பார்கும்
அம்மணக்கோலத்தை
புறக்கணிக்கமுடிவதில்லை.
கடைசி பத்தி மிக அருமை அகலிகன்.வாழ்த்துக்கள்
ReplyDelete