ஒவ்வொன்றும் விசித்திரம்!
கட்டமும், வட்டமும்
மட்டுமேயென்றாலும்
தொடக்கமும் முடிவும்
அவரவர் விருப்பம்!
பூத்தொட்டிக்குள் முளைத்த
பூனை,
மீன்தொட்டிக்குள் நீந்தும்
காகம்
என அபத்தம் பலவும்
அழகாய்!
தவறாய் தோன்றும் எதுவும்
தலைகீழாய் பார்க்கையில்
நேர்த்தியாய்!
வேரும் கிளையும்
ஒரேபோல்!
இடையிடையே
எட்டிப்பார்க்கும் நட்சத்திரம்
Apple லும், Ball லும்
கோணங்கள் மாறியிருந்தாலும்
அழகும், சுவையும்
அப்படியே!
"அ" வும் "ஆ" வும் முன்னதைக்காட்டிலும்
வடிவம் மாறியுள்ளது நேர்த்தியாய்
வகுப்பும்தான்
UKG to I std.
குழந்தையின் காவியம் ! அழகு ..!
ReplyDeleteவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி!
Delete