இங்கேதான் முதல் முதலாய்
பரிமாரிக்கொண்டோம்
பார்வைகளை,
பின்னொரு நாளில்
புன்னகையையும்,
அடுத்தடுத்து
பூக்களையும்,
பொத்திவைத்திருந்த
காதலையும்.
வந்துவிடக்கூடாதென்ற
வேண்டுதலோடே
காத்திருப்போம் - வரவேண்டிய
பேருந்திற்காய்.
இடைப்பட்ட நேரத்தில்
கதைகள் பேசுவோம்,
கலைகள் ஆய்வோம்,
காலம்வென்ற
காப்பியங்களின்
காதல் வியப்போம்,
பேசித்தீர்த்த
பொழுதுகளின் நினைவாய்
கவிதை கிறுக்குவோம்,
கடும் வெயிலோ
காற்றழுத்த தாழ்வுநிலையால்
பெரும் மழையோ
உன் வருகைக்காய்
என் காத்திருப்பும்,
என் காத்திருப்புக்காய்
உன் வருகையும்
தவறியதேயில்லை.
இன்றும் மழைதான்....
கணவனோடு வருவதாய்
கடிதம் எழுதியிருந்தபடியால்
காத்திருக்கிறேன் மனைவியோடு.
இறுதியில் மிக அழகான திருப்பம்....மிக மிக அருமை.
ReplyDeleteஎனது காதல் ஆரம்பித்த இடமும் ஆழ்வார்பேட்டைதான் ஆனால் அது கல்யாணத்தில் முடிந்துவிட்டது. ஒரு வேளை ஆழ்வார்பேட்டையில் இன்னும் இருந்திருந்தால் கவிதையின் முடிவு போல நடந்திருக்கலாம் ஹூம்ம்ம்ம்ம் வடை போச்சே
வாசித்தமைக்கு மகிழ்ச்சி. கல்யாணத்தில் முடிந்த உங்கள் காதலுக்கு வாழ்த்துக்கள். ஆழ்வார்பேட்டை ஒன்றும் சாபக்கேடான இடமல்ல நீங்கள் வருத்தபடுமளவிற்கு. அது தேவதைகள் நிறைந்த இடம். சில சாத்தான்களும் இருக்கத்தான் செய்யும். என்னசெய்யா?
Deletesila kutti suvargalum kavi padum pettai
ReplyDelete