ஊழல் நீக்கும் SURF EXCEL


அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, மற்றும் அவரது மகன் உட்பட ஊழலில் சம்பந்தப்பட்ட பலருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை. 



இவர் முதல்வரா இருந்தபோது 3200 ஆசிரியர்களை நியமிச்சிருக்கார், சும்மாயில்லை தலா நாலு லட்சம்வரை ல‌ஞ்சம் வாங்கிட்டு. எல்லாமே போலி ஆவணங்கள். வலிமையான சமூகத்தை உருவாக்கவேண்டிய பொறுபில் இருக்கும் ஆசிரியர் பணியையே வெறும் பணத்துக்காக போலிகளுக்கு விற்றுவிடத்துணியும் அளவிற்கு தேசத்தின் அரசியல் தலைமைகள் கேடுகெட்டு இருக்கின்றன என்பது மானக்கேடு. அதைவிட மானக்கேடானது இதன் விசாரணைக்கும் தீர்பிற்கும் 13 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இந்த பதிமூன்றாண்டுகளில் கள்ள வழியில் நுழைந்த ஆசிரியர்களிடம் பாடம் படித்தவர்களின் நிலை என்ன? அவர்களின் கல்வித்தரம் என்னவாக இருக்கும். கல்விக்கும், சுகாதாரத்திற்கும் என அடிப்படை தேவைகளுக்கு அரசையே நம்பியிருக்கும் மக்களுக்கு இதுதான் கதியா? அந்த 3200 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்களாய் இருக்கலாம். ஆனால் மீண்டும் அவ்விடங்களை நிறுப்புவதில் ஊழல் நுழையாது என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. ஊழல் கரைகளை மொத்தமாய் நீக்கும் SURF EXCEL எங்காவது கிடைக்குமா?

Comments

  1. "ஊழல் கரைகளை மொத்தமாய் நீக்கும் SURF EXCEL எங்காவது கிடைக்குமா?" Super!

    ReplyDelete
  2. i would have appreciated if this done for a congress CM. I dont feel any sanctity in this news. Only consipiracy heading for local polls in harayana. Moreover karai-ku periya Ra varanum

    ReplyDelete
  3. Vellaiyar pooyinar Kollaiyar vandhanar

    kollaiyar moovarna kodi katti aandanar ( present Continuous tense)

    ReplyDelete

Post a Comment