காலம்


வெற்றியை
விரட்டிப்பிடிக்கும் முயற்சியில்
வீணாகிக்கொண்டிருக்கிறது
வியர்வைத்துளிகள்.

பொதுவான கணிப்பிற்குள்
சிக்காமல்
போக்குக்காட்டிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

வெட்டி வீழ்த்தி
வீரநடை போடநினைக்கையில்
பாதையில் பரவிக்கிடக்கும்
நெருஞ்சியை காட்டி
சிரிக்கிறது விவேகம்.

நிதானம் தவறக்கூடாதெனும்
பிரயத்தனத்தில்
நிலைதடுமாறிக்கொண்டிருக்கிறது
நிகழ்காலம்.

சுயமாய்
நிமிரநினைக்கையில்
ஊன்றுகோல் ஏந்தவைக்கிறது
காலம்.

Comments

  1. Replies
    1. தங்கள் வரவுக்கும் வாசிப்பிற்கும் நன்றி.

      Delete
  2. மாரத்தான் ரேஸ்ல முந்திக்கொண்டு ஓடுவது போல மக்கள் எல்லோரும் எதையோ வெற்றிக்கொள்ள ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த அவசர யுகத்தில்..... இடையில் பலபேரின் சோர்வினால் பிந்தங்கிவிட.... ஓடிக்கொண்டு இருப்போரில் ஒரு சிலர் வெற்றியின் முயற்சியில் உழைத்துக்கொண்டிருக்க....


    காலம் பொன்னானது.... நேற்றைய நாள் இன்று கிடைப்பதில்லை... இன்றைய முயற்சி மட்டுமே நாளைய வெற்றிக்கு வித்தாகிறது.... வெற்றிக்கான முயற்சியில் இழப்பு வியர்வையும் உழைப்பும்... கிடைப்பதோ அனுபவமோ அல்லது வெற்றியோ...

    வாழ்க்கை எனும் மேடையில் அடுத்த காட்சி என்னவென்று கிரஹிக்க முடியாத அளவுக்கு அட்வென்ச்சர் போல அவரவர் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்க... ஒருசிலருக்கு சந்தோஷமும் ஒரு சிலருக்கு துக்கமும் ஒரு சிலருக்கு நன்மையும் ஒரு சிலருக்கு தீமையும் பரிசாய் கொடுத்துக்கொண்டே வாழ்க்கையும் கண்ணாமூச்சி விளையாட்டில் பங்கெடுக்கிறது....

    எல்லா தடைகளையும் தாண்டி முன்னேறும் முயற்சியில் முனைப்புடன் எட்டி நடைவைக்க... கண்முன்னால் பயமுறுத்தும் அரசியல்வாதிகளின் பயங்கரம் ஒருபுறம், விதியின் விளையாட்டில் சிக்கிக்கொண்டு மீள வழி தெரியாமல் திக்குத்தெரியாமல் கண் தெரியாது நாம் பாதையில் கவனத்தை செலுத்த.... அங்கே நம்முடைய தடைகளே நம்மை முன்னேறாது நெருஞ்சிமுள்ளாய் நின்று பயமுறுத்திக்கொண்டிருக்க.... மனம் மட்டும் நம்மை உந்தித்தள்ளிக்கொண்டே இருக்கிறது.. முடியும் முடியும் உன்னால் முடியும்.. முயற்சித்து தான் பாரேன்... முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை.. எடுத்துவைக்காலை.. வழியில் இடரும் அத்தனை தடைகளை முட்களை அகற்றிப்போடும் தைரியம் இருந்தால் போட்டுவிட்டு முன்னேறு... முடியவில்லை என்றால் முள்ளில் கால் வைத்து வலியைப்பொறுக்கும் ஆன்மபலத்தை பெருக்கு..... விஷமாய் வலி உடல்முழுதும் பரவும் முன்னர் அதை சரியாக்கும் வித்தையை படி..... இனி உனக்கு அடுத்து வருபவர் அந்த முள்ளினால் அவதிபடாதவாறு முள்ளை ஒதுக்கிப்போடு இல்லையெனில் முள்ளினால் குத்துப்பட்டு அவதிபடும்போது அருமருந்தாய் செயல்படு என்ற சிந்தனைத்துளிகளை கவிதை வரிகளில் எழுதியது அபாரம்பா...

    கோபத்தில் வார்த்தைகளும் செயல்களும் தடுமாறாமல் உமிழப்படும்போது நிதானத்தை நாம் இழக்காமல் பொறுமையாய் சிந்திய வார்த்தைகளை உமிழ்ந்த கோபத்தை எடுத்து காத்துவைக்கும் துணிவு, பொறுமை மனதிற்கு நாம் தரும் பயிற்சி ஒரு தவமாக.... எந்த சூழலிலும் பொறுமையை கையாளும்போது எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுக்கும் வல்லமைப்பெற்றவராகிவிடுவோம்...

    ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நம் அவசரச்செயல்களுக்கு பின்னாளில் நாமே பொறுப்பேற்று தலைகுனியும் நிலை வந்துவிடும் அபாயத்தை அறியத்தந்த வரிகள் மிக அருமை... நிகழ்காலத்தில் இன்றைய காலக்கட்டத்தில் நடக்கும் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாய் அமைதியை பொறுமையை இடைவிடாமல் காத்து.. நமக்கான வாய்ப்பு வரும்போது சொல்ல வந்த்தை அமைதியாக அழுத்தமாக மற்றவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் சொல்லவைக்கும் அசாத்திய ஆற்றல் பெற்றது நிதானம் மட்டுமே என்ற தீர்க்கதரிசி வரிகள் சிறப்புப்பா...

    கூழோ கஞ்சியோ உழைச்சு நாங்க சாப்பிட்டுக்கிறோம் அதுக்கு வழி செய்து கொடுங்கப்பான்னு கேட்டா ஊன்றுகோல் போல இலவசங்களை அள்ளிக்கொடுத்து முடக்கிவைக்கும் மந்தைகளாக ஜனங்களை மகுடிக்கு கட்டுண்டு வைத்திருப்பதைப்போல வைத்திருக்கும் கொடுமையை தெள்ளிய வரிகளில் கொண்டு வந்த்து சிறப்புப்பா....

    வரிகளில் தீட்சண்யம்... ஆனால் அது தெரியாதபடி இழைத்த மெல்லிய சோகம்... அருமையான கவிதைப்பகிர்வுக்கு அன்புவாழ்த்துகள் அகலிகன்...

    ReplyDelete
    Replies
    1. நான் வாழ்வில் பெறும் எல்லா அனுபவங்களிலும் எதையோ கற்றுக்கொண்டே இருக்கிறோம் அவற்றில் சிலவ‌ற்றை பிற்பாடு அசைபோடுகையில் இன்னும் சிற‌ப்பாக கையாண்டிருக்கலாமோ தவறவிட்டுவிட்டோமோ என ஒரு மெல்லிய சோகம் எழத்தான் செய்கிறது என்னசெய்யா? ஆனாலும் தங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது நன்றி.

      Delete

Post a Comment