பல வருடங்களுக்கு முன்பே
உன்னை அறிந்திருந்தேன்,
பக்கத்தில் எங்கோதான் உன் வீடும்...
நட்பு பாராட்ட நினைத்ததுண்டு
உன்னோடு
நேரம் இடம் கொடுக்காததால்
புன்னகை மட்டுமே
பரிமாறிச்செல்வேன் - பதிலுக்கு நீயும்.
ஞாயிறு மதியங்களில் என்
சன்னலுக்குப்பின்
விரிந்துகிடக்கும் மைதானத்தில்
கால்பந்து ஆடிக்கொண்டிருப்பாய்,
வேர்த்த முகத்தோடு
தண்ணீரும் கேட்டதுண்டு
சமயங்களில்.
கால்சட்டை கழிந்து
லுங்கிக்கு மாறியதும்
காணாமல் போனாய் படிப்படியாய்.
பின் எப்போதுமே
பொது கிணற்றின் மரநிழலிலோ,
கட்டணகழிவறையின்
காம்பெளண்டு ஓரமோ,
பால்வாடி பள்ளியின் படிகட்டுக்களிலோதான்
பார்க்கநேர்ந்தது உன்னை
புகைசூழந்த இருளில்
அப்போதும் புன்னகைப்பாய் - பதிலுக்கு நானும்.
காலதாமதமான இரவு நேரங்களில்
வெறிகொண்ட மிருகமாய்
வான் நோக்கி
திட்டிக்கொண்டிருப்பாய்
திட்டிக்கொண்டிருப்பாய்
யாரையோ!
பார்க்காதவன்போல் கடந்துவிடுவேன்
வேகமாய்.
நீ
எல்லோரிடமும் சொல்லிக்கொள்வாய்
நான் உன் நண்பன் என்று
நான்
எவரிடமும் சொன்னதில்லை.
நான்
ReplyDeleteஎவரிடமும் சொன்னதில்லை
நீ என் நண்பன் என்று.
இந்த வரிகளின் அர்த்தத்தை பாதியில் நிறுத்தி ? வார்த்தைகளை மாற்றினால் ?
இன்னும் அழகாய் இருக்குமோ ?
(நோ நோ, நோ பேட் வோர்ட்ஸ், மனசுக்குள்ள திட்ட கூடாது ஆமா )