அம்பெய்தி ஆளைச்சாய்ப்பதில்
உன் திறமை அபாரம்தான்
நீ போர்க்கோலம் பூண்டதாலேயே
பூக்களுமா கவசமிட்டுக்கொள்ளவேண்டும்?
நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
வீரனுக்கு அழகுதான்
விருந்தாளியிடமுமா?
வாள்வீச தெரிந்தவனெல்லாம்
வன்முறையை வழிமொழிந்தால் -
எஞ்சப்போவது நீயுமில்லை, நானுமில்லை
எனில் பிறற்க்கெதிராய் வில்வளைப்பதில்
ஏன் இத்தனை வேகம்?
நல்ல கவிதை, ஆங்கில வார்த்தைகள் நிச்சயம் தேவையா,
ReplyDeleteஇல்லா விட்டாலும் கவிதை நன்றாக தான் இருக்கிறது
எந்த அம்பின் வலி இது ?