நண்பா


எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
நம் சந்திப்புகள்!
இருவருக்கும் விருப்பமில்லாமலேயே.
உரக்கபேசவும், உயர்த்திப்பிடிக்கவும்
உனக்கொரு கொடியும்,
எனக்கொரு கொள்கையுமாய்
முரண்பட்டு நின்றாலும்
முட்டிக்கொள்ளாமல் இருப்பது
நாகரீகம் கருதிமட்டுமே அல்ல‌
நட்பு கருதியும்தான்.

Comments

 1. மனம் இணைந்தபின்
  தனித்தனி கொடிகளும் கொள்கைகளும் எதற்கு
  ஒரு இணைப்பு விழா நடத்தி
  ஒன்றாகிவிடலாமே
  நல்ல ப்திவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment