உன்னோடு


பேருந்து சன்னல்களிலும்,
பெரிய வீடுகளின் திண்ணைகளிலும்,
மாடிப்படி வளைவுகளிலும்,
மஞ்சள் வண்ண சேலைகளிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உன்னை,
நம் பிரிவுக்குப்பின்னும்.

கருமேகம் கவிழ்ந்த
காலை வேளைபோல்
அமானுஷ்யம் சூழ்ந்த அந்த நாளில்
தொடங்கிய நம் இடைவெளியை
இட்டு நிரப்பும் முயற்சியாய்

காற்று அழைத்துச்சென்ற
திசைகளிலெல்லாம்
கண்களை அலையவிட்டபடி
மிதக்கிறேன்,
இதுதான் என இலக்கில்லாமல்
எதிர்படும் எதனிடத்திலும்,
எவரிடத்திலும்
வர்ணிக்கத்தொடங்குகிறேன்
தொலைத்துவிட்ட‌
உன்னுடனான காலங்களை
கவிதையாய்!Comments

 1. பிரிவுக்குப் பின்னும்
  இட்டு நிரப்பும் முயற்சியாய்
  வர்ணிக்கத் துவங்குகிறீர்கள்
  தொலைத்துவிட்ட
  அவளுடனான காலங்களை....
  நாங்கள் அதை நல்ல
  கவிதைகள் என்கிறோம்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  ..

  ReplyDelete

Post a Comment