பந்தயம்


நாம் பார்த்த குதிரையும் நமக்கு பிடித்த குதிரையும் மட்டுமே பந்தயமல்ல, நாம் பார்க்காத பள்ளம் மேடுகளும்,குதிரைக்குக்கொடுக்கப்பட்ட கொள்ளும், ரம்மும்கூட பந்தயத்தின் அங்கம்தான். நாம் கலந்துகொள்வதாலும் கைத்தட்டி உற்சாகப்படுத்துவதாலும் மட்டுமே பந்தயம் நடப்பதில்லை அதில் ஒன்று ஜெயிப்பதுமில்லை. தனக்கு தேவையான குதிரையை தேர்ந்தெடுப்பதற்கும், தேர்ந்ததை தனக்கு தேவையானபடி ஓட்டிப்பார்க்க விரும்புவர்களாலேயுமே பந்தயம் நடத்தப்படுகிறது.

ஜெயித்த குதிரையின் ஆட்டம்
ரசிக்கக்கூடியதுதான் - அரங்கில்
கூட்டம் நிறைந்தவரை.
தோற்ற குதிரையின் க‌ண்ணீர்
ச‌கிக்க‌க்கூடிய‌துதான் - காரணம் 
அறியப்படாதவரையில்.
ஜெயித்த "ஜே" வோ!
தோற்ற "க" வோ!
அடுத்த‌ ஓட்ட‌த்திற்குகான‌
ஒத்திகையில் முனைப்பாய்த்தான்.
க‌ண்டுக‌ளித்த‌வ‌ர் கைக‌ள் ம‌ட்டும்
க‌ரைப‌டிந்து!

Comments

  1. பந்தயத்திற்கு ஒரு புதுமையான வரையறை அருமை

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. நன்றி திரு பனித்துளி அவர்களே. நீங்கள் தந்த அறிவுறைக்கு நன்றி word verification மாற்றிவிட்டேன்.

    ReplyDelete

Post a Comment