பல கோடி ரூபாய் செலவில் செட்போடப்பட்ட மன்னிக்கவும் கட்டப்பட்ட புதிய தலமை செயலகம் மீண்டும் செயின் ஜார்ஜ் கோட்டையை நோக்கி நடைபோடப்போகிறது.
இடப்பற்றாக்குறை, கட்டிடப்பழுது என பலகாரணங்கள் காட்டி செயின் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது தலைமைச் செயலகம். தற்போது admk ஆட்சியமைக்கும் சூழ்நிலையில் இது மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகய செலவினங்கள் தனிமனித காழ்ப்புக்களினால்
விரயமாக்குவது ஆட்சியாளர்கள் மேல் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும்.
புதிய தலைமைச்செயலகத்தின் ஒவ்வொரு செங்கலிலும் சாமானியனின் உழைப்பில் செலுத்திய வரியும் உள்ளது. உண்மையிலேயே தலைமைச்செயலகம் இஅடம் மாறுமேயானால். புதிய கட்டிடத்தை பெரிய நிருவனங்களுக்கு வாடகைக்கு கொடுத்து அந்த வருமானத்தை குடியின் போதையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அதிலிருந்து மீண்டுவருவதற்கான மறுவாழ்வுமையங்கள் அமைப்பதற்கு செலவிடட்டும். அப்போதுதான் மக்கள் மனம் மகிழும்.
எவ்வளவு கோடி! அதை ஒப்பந்தக்காரரிடமிர்ந்தாஅல்லது, தாத்தாவிடமிருந்தா வசூல் செய்யப்பொகிறார்கள்.அதைச் சொல்லுமய்யா!
ReplyDelete