எக்ஸ்பிரஸ் வழியும் எனது பயமும்



நோய்டா- ஆக்ரா இடையேயான 6 வழி அதிவிரைவு சாலை திட்டதை முன்னிட்டு சுமார் 300த்தி சொச்சம் கிராமங்களிலிருந்து கையாடிய விவசாய நில‌ங்களுக்கான அர்சு நிர்ணயித்த விலை அடிமாட்டுத்தனமாய் இருப்பதால் அதை எதிர்த்து விவசாயிகள் கடந்த சில வருடங்களாகவே போரடிவருகின்றனர். இதன் உச்சமாக கடந்த சில நாட்களாக விவசாயிகளின் வேகம் நேரடியாக களத்தில் இற‌ங்கும் அளவிற்கு வந்துள்ளது.

சில நாட்களுக்குமுன் இப்போராட்டத்தை தூண்டியதாக தலை மறைவாக உள்ள விவசாயிகள் சங்கத்தலைவர்மேல் குற்றம்சாட்டப்பட்டு அவர் தலைக்கு 
ரூபாய் 50,000 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்கையளவில் மக்கள் நலன் அரசு என சொல்லிக்கொள்ளும் அரசு ஒரு நியாயமான போராட்டத்திற்கு தெரிவிக்கும் எதிர்வினை இதுவா?. அநியாயத்திற்கு எதிராய் அணிதிரண்ட விவசாயிகளை மக்கள் நலத்திட்டம் எனும் பெயரில் அடக்கியொடுக்கும் அரசு நாளை இதே மக்கள் நலன் என்னும் பெயரில் அரசுக்கு எதிராய் யாரேனும் அணிதிரண்டால்! நினைக்கவே பயமாய் இருக்கிறது.

Comments

  1. எல்லோருமே ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சும்
    ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபின்பு ஒரு பேச்சும்
    பேசுகிற சூழல் உள்ள நாடாக நம் நாடு மாறிப் போனதை
    எண்ணுகையில் ஏழைகளின் எதிர்காலம்
    கேள்விக்குறியாகத்தான் தோன்றுகிறது
    சமூக சிந்தனையை தூண்டிச் செல்லும் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அரசு நாளை இதே மக்கள் நலன் என்னும் பெயரில் அரசுக்கு எதிராய் யாரேனும் அணிதிரண்டால்! நினைக்கவே பயமாய் இருக்கிறது.
    ////உங்கள் பயம் உண்மை தான் ..........

    ReplyDelete
    Replies
    1. புரிந்து கொண்டதற்கு நன்றி மணி சார்.

      Delete
  3. vinayae vinayin payanagirathu.

    Ozone ottai, mazhayinmai, varatchi, panjam, - ivai vinai payangal,

    Vinai-- Golden quadralateral

    ReplyDelete

Post a Comment