வெற்றி


ஒளியச் சாத்தியமான‌
எல்லா இடங்களும்
அறியப்பட்டப்பின்
சுவாராஸ்யமிழக்கும்
கண்ணாம்பூச்சிபோல்
உன்னை அடையக்கிடைத்த‌
வழிகளையெல்லாம்
தவறவிட்டபின்
தொட‌ர‌ப்பிடிக்க‌வில்லை
இன்னொரு முய‌ற்சியை.

Comments

 1. மிக அருமை
  கண்ணாம்மூஞ்சி ஆட்டம் போல்
  என இருந்தால் கொஞ்சம்
  தடங்கள் இல்லாமல் படிக்கலாம் போல் பட்டது
  நல்ல சிந்தனை நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment