எவர்சொன்ன பொய்களையோ
சுமந்தபடி
அலைந்துகொண்டிருக்கிறேன்
பாலைவனங்களில்
பாற்கடல் தேடி.
தாகம்
சுவைத்துக்கொண்டிருக்கிறது
நாவை.
கண்முன் விரிந்துகிடக்கிறது
கானல் - கடல் நீராய்.
பனிக்குடத்துப் பெருவெளியில்
புதைந்துபோகும் வரம்வேண்டி
தொழுதுகொண்டிருக்கிறேன்
விடியலின் திசைநோக்கி.
பலர் சொன்ன
பொய்களில் ஒன்றாய்
வீழ்ந்துகொண்டிருக்கிறது
சூரியன் - கிழக்கில்.
Comments
Post a Comment