தனிமை
வழக்கமாய் போகும்
பாதைதான்
இலக்கற்று நடக்கையில்
இதமாய் இருக்கிறது.
துணை வந்துகொண்டிருக்கும்
தனிமையின் தவத்தை
கலைத்துக்கொண்டிருக்கிறது
நிழலின் விசுவாசம்.


Comments

  1. நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment