லிபியா மீது அமெரிக்கா உள்ளிட்ட‌ ஐந்து நாடுகள் குண்டு மழை


தயாரிக்கப்பட்ட சிலுவைகளிலும்
தயாராகிக்கொண்டிருக்கும்
ஆணிகளிலும் - அறையப்படுவதற்காய்
ஆள் தேடிக்கொண்டிருக்கின்றனர்
ஆதாமின் பிள்ளைகள்.
பொய்க்காரணம் பொருந்துமாயின்
இரண்டு சிலுவை
ஆறு ஆணிகள்,
பொருந்தாவிடினும்
சிலுவை நிச்ச‌ய‌ம்.

Comments

  1. இறுதியாக ஸ்பார்டகஸ்ஸையும்
    அவன் நண்பனையும் போரிடச் சொல்லி
    யாராவது ஒருவர் இறந்துதான் ஆகவேண்டும்
    வென்றவன் என்னால் கொல்லப்படுவான் என
    ஒரு புதுமையான தீர்ப்பைச் சொல்வான் சீசர்
    அந்த வரிகளை நினைவுபடுத்திப்போகிறது
    "பொருந்தாவிடினும் சிலுவை நிச்சயம்".... என்கிற
    உங்கள் இறுதி வரிகள்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment