சிக்கல்


நம்மிடையேயான தொடர்பு சங்கிலியில்
அங்கங்கே சில முடிச்சுக்கள்,
அவிழ்க்க எத்தனிக்கையில்
ஏற்ப்பட்டுவிடுகின்றன மேலும் சில.
சேர்ந்துபோன சிக்கல்களால்
இறுகிக்கிடக்கிறது சங்கிலி - நம்
இருவரையும் சுமந்தபடி.
தெரித்துச்சிதறும் தருணம்
தெரியாதென்பதால்
தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது
முடிச்சவிழ்க்கும் முயற்சி.

Comments

  1. //தெரித்துச்சிதறும் தருணம்
    தெரியாதென்பதால்
    தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது
    முடிச்சவிழ்க்கும் முயற்சி.//

    தெரித்துச்சிதறும் தருணம்
    தெரியாதென்பதாலா இல்லை
    தெரித்துச்சிதறும் என்ற பயத்தால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறதா அகலிகன் சார்

    இப்படிக்கு
    அ அ க பெ சந்திரன்

    ReplyDelete
  2. சிக்கல் குறித்து சிக்கல் இல்லாமல் ஒரு
    அருமையான படைப்பைக் கொடுத்தமைக்கு
    பாராட்டுக்கள்நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment