நேற்று...
எரியும் மெழுகின்
அலையும் ஒளியில்
ஆடிய நிழல்கள்
பேசிக்கொண்டன
ஒளியின் புகழை.
சுடரின் அடியில்
நிலவும் நிழலில்
விட்டில்களின் பிணங்கள்,
தூண்டியதற்கு தண்டணையாய்
தன்னையே கரைத்துக்கொண்டது
மெழுகு.
இன்று...
கரைந்த மெழுகின்
கண்ணீர்த்துளிகள்
உறைந்துகிடக்கிறது
தரையெங்கும்,
அணைந்த மெழுகின்
கரிந்த திரியில்
படிந்துகிடக்கிறது
நேற்றின் இருள்.
ஏற்றியதற்கு
தண்டணையாய்
தலைகுனிந்துகிடக்கிறது
தீக்குச்சி.
விழியில் விழுந்து இதயம் நனைந்து
ReplyDeleteஉயிரில் கலந்த உறவே
பாணியில் உள்ளது . அருமை. சந்தம் சிந்து பாடுகிறது
நாளை என்று தொடர்ந்திருந்தால்
ReplyDeleteகவிதை இன்னும் சிறப்புப் பெற்றிருக்குமோ?
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
,
ஒளியின் பெருமைபேசுவது இருள்.
ReplyDeleteதொடர்கதையாய்....