எதுவுமாகவும்அதற்குள் எதையாவது வைக்கலாம்,
அதை எதிலாவ‌து வைக்கலாம்,
சோப்பு போட்டு குளிப்பாட்டலாம்,
நூல்கட்டி தொங்க‌விடலாம்,
க‌ல‌ர் அடிக்க‌லாம்,
car ஓட்டலாம்,
தரையில் நிற்கவைத்து TV பார்க்க‌லாம்,
த‌ண்ணீர் வாளிக்குள்
க‌ப்ப‌ல் விடலாம்,
யாராவது கேட்டால்
த‌ர‌ ம‌றுக்க‌லாம்,
த‌ங்கைக்கு மட்டும் கொடுக்க‌லாம்,
எங்காவ‌து தொலைத்துவிட்டு அழ‌லாம்,
இன்னும் என்ன‌வெல்லாமோ செய்ய‌லாம்
நாம் வேண்டாமென வீசியெறிந்த எதையும்
குழந்தைகள்.

Comments

 1. வேண்டாதவைகளை வைத்து குழந்தைகளால்
  எவ்வளவு செய்ய முடிகிறது
  எனக்கு ஆச்சரியமாக இருந்தது
  ஆனால் குழந்தைகள் குழந்தைகளாக
  இருக்கும் வரையில்தான் என
  எண்ணிப் பார்க்கையில் கொஞ்சம்
  மனச்சங்கடமாகவும் இருந்தது
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அழகான கவிதை, மிகவும் ரசித்தேன்.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. குழந்தை மனம் ஆழ்ந்த கவனிப்பு...
  நிறைய முறை உணர்ந்த கவிதை
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment